விழுப்புரம் காந்தி சிலை அருகே ஆனந்தா சைக்கிள் ஸ்டோர் என்ற பிரபல சைக்கிள் விற்பனை நிலையம் உள்ளது. விஜயராணி என்பவருக்குச் சொந்தமான இந்த விற்பனை நிலையத்தில், நேற்று கடையின் பக்கவாட்டில் சுவரைத் துளையிட்டு அடையாளம் தெரியாத நபர்கள் உள்ளே புகுந்து கல்லாப்பெட்டியில் இருந்த ஒரு லட்சத்து 73 ஆயிரம் ரூபாயை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.
இன்று (நவம்பர் 02) காலை சுமார் 10 மணிக்கு கடையை திறந்தபோது கடையில் இருந்த பணம் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த விழுப்புரம் நகர காவல் துறையினர் மோப்பநாய் உதவியுடன் விசாரணை நடத்திவருகின்றனர்.
இதையும் படிங்க: தாய் வீட்டில் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்ட இளம்பெண்