விழுப்புரம்: கெடார் அருகே உள்ள குண்டலப்புலியூர் அன்பு ஜோதி(Anbu Jothi Ashram) அறக்கட்டளையில் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுத் துன்புறுத்தப்பட்ட சம்பவம் நடைபெற்றது. அந்த சம்பவத்தில் தொடர்புடைய அறக்கட்டளையின் நிர்வாகி ஜூபின் பேபி அவரது மனைவி மரியா பணியாளர்கள் சதிஷ், கோபிநாத், பிஜீமேனன் உள்ளிட்ட 8 பேரை கெடார் போலீசார் கைது செய்யப்பட்டனர்.
இந்த நிலையில் ஆசிரமத்திலிருந்து 15 பேர் காணாமல் போனதாகவும், உடல் உடல் உறுப்புகள் திருடப்பட்டுள்ளதாகப் புகார் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இது தொடர்பாக டிஐஜி பாண்டியன் தலைமையிலான 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஒரு தனிப்படையினர் பெங்களூரில் உள்ள ஆசிரமத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும், அன்பு ஜோதி அறக்கட்டளை மூடப்பட்டுள்ளதால் நேற்று அறக்கட்டளையின் மூடப்பட்ட 10 அறைகளின் பூட்டினை டிஎஸ்பி பிரியதர்ஷினி மற்றும் வட்டாட்சியர் ஆதிசக்திசிவகுமரிமன்னன் தலைமையில் ஆசிரமத்திலிருந்து 10 செல்போன்கள், மடிக்கணினிகள் மற்றும் மாத்திரைகள் உள்ளிட்ட முக்கிய ஆவணங்களைக் கைப்பற்றி கெடார் காவல் நிலையம் எடுத்து சென்றனர். மேலும் ஆசிரமத்தில் கைப்பற்றிய ஆவணங்களுடன் ஆசிரமத்தில் வளர்க்கப்பட்ட இரண்டு புறாக்களையும் சேர்த்து எடுத்துச் சென்றுள்ளனர்.
இதையும் படிங்க: ரூ.2 லட்சம் செலவில் அரசு பள்ளியை சீரமைத்த ஐ.டி ஊழியர்கள்!
அன்பு ஜோதி ஆசிரமத்தில் சேர்க்கப்பட்டவர்கள் காணாமல் போனதாகத் திருப்பூரைச் சார்ந்த அருண் தனது தாய் பத்மாவதி மற்றும் புதுச்சேரியைச் சார்ந்த நடராஜ் என்பவரை மீட்டுத் தரக்கோரி கெடார் காவல் நிலையத்தில் இன்று புகார் அளித்துள்ளனர். மேலும், கைது செய்யப்பட்டவர்கள் நீதிமன்ற காவலில் சிறையில் உள்ளதால் போலீசார் திங்கட்கிழமை விழுப்புரம் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்து தங்களது பாதுகாப்பில் எடுத்து விசாரணை மேற்கொள்ள உள்ளனர்.
மேலும் அன்பு ஜோதி அறக்கட்டளையின் உரிமையாளர் ஜூபின் பேபி மீது கோயம்புத்தூரில் உள்ள தொண்டாமுத்தூரில் இதே போன்று ஆஷிரமம் கிளை நடத்தி வன்கொடுமையில் ஈடுபட்டுள்ளதாக போலீசார் 3 நாட்களுக்கு முன்பு வழக்குப்பதிவு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: கர்நாடக மாநில வனத்துறையினருக்கு முதலமைச்சர் கடும் கண்டனம்!