ETV Bharat / state

விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு எந்திரங்கள் ஒதுக்கீடு!

author img

By

Published : Oct 9, 2019, 1:39 PM IST

விழுப்புரம்: விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு எந்திரங்கள் கணினி முறையில் ஒதுக்கீடு செய்யும் பணியை மாவட்ட தேர்தல் அலுவலர் தொடங்கி வைத்தார்.

வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஒதுக்கீடு குறித்து பேசிய மாவட்ட தேர்தல் அலுவலர்

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதிக்கு அக்டோபர் 21ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. இதையடுத்து, வாக்குப்பதிவு எந்திரங்கள் கணினி முறையில் ஒதுக்கீடு செய்யும் பணியை மாவட்ட தேர்தல் அலுவலர் இல. சுப்பிரமணியன் இன்று தொடங்கி வைத்தார்.

அதனைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட ஆட்சியர், விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் 275 வாக்குப்பதிவு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. வாக்கு பதிவு செய்யும் இயந்திரம் 344, வாக்கு பதிவாகும் இயந்திரம் 344, யாருக்கு வாக்களித்தோம் என்பதை உறுதி செய்யும் இயந்திரங்கள்(VVPAT) 358 ஆகியவை வாக்குப் பதிவுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. ஒரு வாரத்திற்குப் பிறகு எந்த வாக்குச்சாவடிக்கு எந்த வாக்குப்பதிவு இயந்திரம் என்பதை உறுதி செய்யப்படும் என தெரிவித்தார்.

விழுப்புரம் மாவட்டத்தில் வாக்குக்கு பணம் கொடுப்பதற்காக வைத்திருந்த ரூபாய் 10 லட்சத்து 85 ஆயிரத்து 600 ரூபாய் பறக்கும்படை, நிலை கண்காணிப்பு குழுவால் பறிமுதல் செய்யப்பட்டது. தேர்தல் நன்னடத்தை விதிகளை மீறியதற்காக 47 வழக்குகள் இம்மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதேபோல் ரூபாய் 10 லட்சத்து 35 ஆயிரம் மதிப்பிலான பொருட்களும், மதுபானங்களும் பறிமுதல் செய்யப்பட்டன. இதையடுத்து மாவட்டம் முழுவதும் கண்கானிப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது என்றார்.

இதையும் படிங்க : அதிமுக வேட்பாளரை ஆதரித்து நாங்குனேரியில் வாக்கு சேகரித்த அமைச்சர் உதயகுமார்!

Intro:விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் இதுவரை 21 லட்சத்து 20000 பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.Body:விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு எந்திரங்கள் கணினி முறையில் ஒதுக்கீடு செய்யும் பணியை மாவட்ட தேர்தல் அதிகாரி இல. சுப்பிரமணியன் இன்று தொடங்கி வைத்தார்.

அதனைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட ஆட்சியர் சுப்ரமணியன்.,

"விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் 275 வாக்குப்பதிவு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. வாக்கு பதிவு செய்யும் இயந்திரம் 344, வாக்கு பதிவாகும் இயந்திரம் 344, யாருக்கு வாக்களித்தோம் என்பதை உறுதி செய்யும் இயந்திரம் 358ம் வாக்கு பதிவுக்கு பயன்படுத்தப்படவுள்ளது.

ஒரு வாரத்திற்கு பிறகு எந்த வாக்குச்சாவடிக்கு எந்த வாக்கு பதிவு இயந்திரம் என்பதை உறுதி செய்யப்படும்.

விழுப்புரம் மாவட்டத்தில் இதுவரை பறக்கும்படை மற்றும் நிலையான கண்காணிப்பு குழுவால் ரூபாய் 10 லட்சத்து 85 ஆயிரத்து 600 ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இதேபோல் ரூபாய் 10 லட்சத்து 35 ஆயிரம் மதிப்பிலான பொருட்கள் மற்றும் மதுபானங்களை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

Conclusion:மேலும் தேர்தல் நன்நடத்தை விதிகளை மீறியதற்காக 47 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. மாவட்டம் முழுவதும் கண்கானிப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது" என்றார்
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.