விழுப்புரம்: பில்லூர் கிராமத்தில் மதுரை வீரன் கோயில் பின்புறம் அருகே தினந்தோறும் சீட்டுக்கட்டு விளையாட்டில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஈடுபட்டு வருகின்றனர். தீபாவளி திருநாளான இன்று (அக். 24) அவர்கள் குழுக்களாக கலந்துகொண்டு ஆயிரக்கணக்கான ரூபாய்களை வைத்து விளையாடினர்.
இவர்கள் தங்களது குடும்பங்களின் சூழ்நிலையை நினைத்து பார்க்காமல் விளையாடி வருகின்றனர்.
இதே நிலை நீடித்தால் பல குடும்பங்கள் சீட்டு கட்டு போல சரிந்துவிடும். இதுகுறித்து காவல் துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
இதையும் படிங்க: காஞ்சியில் அரிய நிகழ்வு:ஏகாம்பரநாதர், காமாட்சி அம்பாளின் உற்சவர்கள் ஒரு சேர வீதி உலா...!