விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அடுத்த ஆத்திக்குப்பம் கிராமத்தில் ராமலிங்கம் என்பவர் வீட்டில் நேற்று இரவு மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது. உடனே அருகிலிருந்தவர்கள் வீட்டில் இருப்பவர்களை வெளியேற்றினர்.
பின்னர் எரிந்து கொண்டிருந்த வீட்டை அணைக்க முயற்சி செய்தனர். இருப்பினும் தீயானது மளமளவென பரவியது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு தீயணைப்புத் துறையினர் விரைந்துவந்தனர். ஆனால், அவர்கள் வருவதற்குள்ளாகவே அருகிலிருந்த மற்றொரு வீட்டில் தீப்பற்ற தொடங்கியது. தீயணைப்புத் துறையினர் தீயை கட்டுக்குள் கொண்டுவருவதற்குள் வீடு முழுவதும் எரிந்து சாம்பலானது.
இந்தத் தீ விபத்தில் இரண்டு வீட்டிலுமிருந்த சுமார் 12 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசமடைந்தன. மேலும் இரண்டு ஆடுகள் உயிரிழந்தன. இது குறித்து மரக்காணம் காவல் துறையினர் விசாரணை செய்துவருகின்றனர்.
இதையும் படியுங்க: