ETV Bharat / state

தோல்விக்கு பாஜகதான் காரணம்: அமைச்சர் சி.வி.சண்முகம்

விழுப்புரம்: திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் செய்த பொய் பரப்புரையையும், குற்றச்சாட்டையும் பாஜக முறையாக கையாளாததுதான் தேர்தல் தோல்விக்கு காரணம் என அமைச்சர் சி.வி. சண்முகம் கூறியுள்ளார்.

சிவி சண்முகம்
author img

By

Published : Jun 9, 2019, 3:39 PM IST

விழுப்புரத்தில் ரூ.65 கோடி மதிப்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள சட்டக் கல்லூரி வளாகத்தை அமைச்சர் சி.வி.சண்முகம் இன்று ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில் அவர் , “அதிமுக வாரிசுகளின் இயக்கமல்ல தொண்டர்களின் இயக்கம். தொண்டர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கக்கூடிய இயக்கம். எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோர் தொண்டர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து கட்சியை வழிநடத்தினர்.

தொண்டர்களின் உணர்வுகளை பிரதிபலிக்கும் இடம் பொதுக்குழு. பொதுக்குழுவில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தின்படி கட்சியும், ஆட்சியும் சிறப்பாக நடைபெற்று வருகிறது. தனக்கு பின் யாரையும் ஜெயலலிதா கைகாட்டிவிட்டு செல்லவில்லை. இது சங்கரமடமோ, திமுகவோ அல்ல.

அமைச்சர் சிவி சண்முகம் செய்தியாளர் சந்திப்பு

மக்களவைத் தேர்தல் தோல்வியை முழுமையாக ஏற்றுக்கொள்கிறோம். பாஜகவுடன் கூட்டணி வைத்தது மட்டுமே தேர்தல் தோல்விக்கு காரணமல்ல. பாஜக தமிழர்களுக்கு எதிரான செயல்களில் ஈடுபடுவது போல கடந்த இரண்டு ஆண்டுகளாக திமுக உள்ளிட்ட எதிர்கட்சிகள் பொய் பிரசாரம் செய்து வருகின்றன. இந்த குற்றச்சாட்டை பாஜக முறையாக கையாளவில்லை.

பாஜக மீதான அதிருப்தி அதிமுகவையும் பாதித்தது. அதனால்தான் எங்களுக்கு தோல்வி ஏற்பட்டது. மேலும், சிறுபான்மையினர் வாக்குகளையும் முழுமையாக இழக்க நேரிட்டது. தமிழ்நாட்டில் சிறுபான்மையினருக்கு பாதுகாப்பாக இருக்கும் ஒரே கட்சி அதிமுக மட்டுமே. திமுக போல் நாங்கள் இரட்டை வேடம் போடுபவர்கள் அல்ல" என்றார்.

Intro:விழுப்புரம்: தமிழகத்தில் திமுக உள்ளிட்ட எதிர்கட்சிகளின் குற்றச்சாட்டுகளை, பாஜக சரியான முறையில் கையாளாததே தோல்விக்கு காரணம் என தமிழக சட்டம் மற்றும் சிறைத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் கூறியுள்ளார்

Body:விழுப்புரத்தில் ரூ.65 கோடி மதிப்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள சட்ட கல்லூரியை வளாகத்தை அமைச்சர் சி.வி.சண்முகம் இன்று ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது:

"அதிமுக வாரிசுகளின் இயக்கம் அல்ல; தொண்டர்களின் இயக்கம். தொண்டர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கக்கூடிய இயக்கம்.

மறைந்த எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோர் தொண்டர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து கட்சியை வழிநடத்தினர்.

தொண்டர்களின் உணர்வுகளை பிரதிபலிக்கும் இடம் பொதுக்குழு. பொதுக்குழுவில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தின்படி கட்சியும், ஆட்சியும் சிறப்பாக நடைபெற்று வருகிறது.

தனக்கு பின் யாரையும் ஜெயலலிதா கைகாட்டி விட்டு செல்லவில்லை. இது சங்கரமடமோ, திமுகவோ அல்ல.

நாடாளுமன்ற தேர்தல் தோல்வியை முழுமையாக ஏற்றுகொள்கிறோம். பாஜகவுடன் கூட்டணி வைத்தது மட்டுமே தேர்தல் தோல்விக்கு காரணம் அல்ல.

பாஜக தமிழர்களுக்கு எதிரான செயல்களில் ஈடுபடுவது போல் கடந்த இரண்டு ஆண்டுகளாக திமுக உள்ளிட்ட எதிர்கட்சிகள் பொய் பிரசாரம் செய்து வருகின்றன. இந்த குற்றச்சாட்டை பாஜக முறையாக கையாளவில்லை.

பாஜக மீதான அதிருப்தி அதிமுகவையும் பாதித்தது. அதனால்தான் எங்களுக்கு தோல்வி ஏற்பட்டது. மேலும், சிறுபான்மையினர் வாக்குகளையும் முழுமையாக இழக்க நேரிட்டது.

Conclusion:தமிழகத்தில் சிறுபான்மையினருக்கு பாதுகாப்பாக இருக்கும் ஒரே இயக்கம் அதிமுக மட்டுமே. திமுக போல் நாங்கள் இரட்டை வேடம் போடுபவர்கள் அல்ல" என்றார்.

இந்த சந்திப்பின் கோலியனூர் அதிமுக ஒன்றிய கழக செயலாளர் பேட்டை முருகன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.