விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் திமுக மாவட்ட பொருளாளர் புகழேந்தி, மாவட்ட துணை செயலாளர் ஜெயச்சந்திரன் மற்றும் விவசாய அணி துணை செயலாளர் கேசவன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
கூட்டத்தில் அவர்கள் சாத்தனூர் அணையில் இருந்து தென்பெண்ணை ஆற்றில் திறக்கப்படும் தண்ணீர் அனைத்து விவசாய பகுதிகளுக்கும் குடிநீர் ஆதாரத்துக்கும் பயன்படும் வகையில் பகிர்ந்து அளிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.
மேலும் கடந்த 3 ஆண்டுகளாக பருவமழை பொய்த்துப் போனதால் இந்த பகுதிகளில் விவசாயத் தேவைகளுக்கு, குடிநீர் பயன்பாட்டுக்கு தண்ணீரின்றி அப்பகுதி மக்கள் தவித்து வருகின்றதாகவும் தெரிவித்தனர்.
இதையும் படிங்க :நடிகர் சங்கத் தேர்தல் ரத்து: மறுதேர்தல் நடத்த உயர் நீதிமன்றம் உத்தரவு