ETV Bharat / state

பிரபல ரவுடியான தன்பாலின சேர்க்கையாளர் அபினேஷ் கொலை - மூவர் கைது; பின்னணி என்ன? - குற்றச் செய்திகள்

விழுப்புரத்தில் தன்பாலின உறவில் ஈடுபட கட்டாயப்படுத்தி சிறுவர்களை கொலை செய்துவந்த, பிரபல ரவுடியை, பாதிக்கப்பட்ட இளைஞர்கள் கொன்று வீசியுள்ளனர்.

தன்பால் உறவில் ஈடுபடுத்தி சிறுவனை கொலை செய்தவர் வெட்டி கொலை

author img

By

Published : Apr 13, 2022, 7:26 PM IST

விழுப்புரம்: கடந்த 2020ஆம் ஆண்டு விழுப்புரம் மாவட்டத்தையே உலுக்கிய சம்பவம் தான் 13 வயது சிறுவனை தன்பால் உறவில் ஈடுபடுத்திக்கொன்று புதைத்த சம்பவம். இச்சம்பவம் குறித்து காவல் துறையினர் நடத்திய தீவிர விசாரணையில், மரக்காணம் அடுத்த நொச்சிக்குப்பம் பகுதியைச் சேர்ந்த மீனவர் கலைமணி என்பவரது மகன் அபினேஷ் (22) என்பவர் தான் குற்றவாளி எனத் தெரியவந்தது.

மேலும், இதேபோல் அப்பகுதியைச் சேர்ந்த ரீனேஷ் (12) என்ற மற்றொரு சிறுவனையும் அபினேஷ், தன்பால் உறவுக்கு அழைத்துக்கொலை செய்து புதைத்தது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து, அவர் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் தற்போது ஜாமீனில் வெளியே வந்தார். வெளியே வந்த அபினேஷ், கோட்டகுப்பம் பகுதியில் ஒரு வீட்டில் குடியிருந்துள்ளார். இவர் மேல் திருட்டு, வழிப்பறி, கொலை உள்ளிட்ட வழக்குகளும் நிலுவையில் உள்ளன.

தன்பால் உறவில் ஈடுபட சிறுவனுக்கு துன்புறுத்தல்

இந்நிலையில் நேற்று முன்தினம் (ஏப்.11) இரவு அடையாளம் தெரியாத நபர்களால் அபினேஷ் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த விழுப்புரம் மாவட்ட கோட்டகுப்பம் காவல் துறையினர், உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக புதுச்சேரி தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தொடர்ந்து இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், விசாரணையைத் தொடங்கினர். விசாரணையில், கோட்டகுப்பத்தில் அவர் இருந்த வீட்டின் மேல்தளத்தில் வசிக்கும் 7 வயது சிறுவனுக்கு அபினேஷ் தொடர்ந்து தன்பால் உறவில் ஈடுபடக்கோரி தொல்லை கொடுத்து வந்தது தெரியவந்தது.

சிறுவன் கொலை

இதனையறிந்த சிறுவனின் சித்தப்பா கடந்த ஏப்.4ஆம் தேதி அபினேஷை மிரட்டியுள்ளார். இதனால், ஆத்திரமடைந்த அபினேஷ், அன்று இரவே சிறுவனை வன்கொடுமை செய்து, கொலை செய்து, கடலில் வீசியுள்ளான். மறுநாள் ஏப்.5ஆம் தேதி சிறுவனின் உடல் சோலை நகர் கடலில் கரை ஒதுங்கியது.

இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த சிறுவனின் உறவினர் சதீஷ், தனது நண்பர்கள் அப்பு, அஜீத் ராஜ், அகமது அசேன், அரவிந்த் ஆகியோருடன் சேர்ந்து அபினேஷை கத்தியால் குத்தி கொடூரமாக கொலை செய்து, அபினேஷின் உடலை சாலை ஓரத்தில் வீசிவிட்டு தலை மறைவாகியது விசாரணையில் தெரியவந்தது.

போலீஸ் விசாரணை

தொடர்ந்து, கொலைக்குற்றவாளிகளை காவல் துறையினர் தீவிரமாகத் தேடி வந்த நிலையில், சதீஷ் (20), அஜீத் ராஜ் (22), அகமது அசேன் ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். தொடர்ந்து அபினேஷால் வேறு யாரேனும் பாதிக்கப்பட்டுள்ளனரா என்பது குறித்து காவல் துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: தொடர் கொள்ளை சம்பவம்: சினிமா பட பாணியில் 3 பேர் கைது

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.