விழுப்புரம் மாவட்டம் கருங்காலிப்பட்டு கிராமத்தை சேர்ந்த விவசாயி பாலாஜி(50). இவர் நேற்று தனது வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் வெளியூர் சென்றுள்ளார்.
இதனை அறிந்த அடையாளம் தெரியாத நபர்கள், நேற்றிரவு வீட்டின் பின்பக்கம் இருந்த ஜன்னல் கதவுகளை உடைத்து பீரோவில் இருந்த 30 சவரன் தங்கம் மற்றும் வெள்ளி நகை, எல்இடி டிவி உள்ளிட்ட பொருட்களை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.
வீட்டிலிருந்து சத்தம் வருவதையறிந்து வந்த உறவினர் ஒருவரை கம்பியால் தாக்கிவிட்டு தப்பிச் சென்றுள்ளனர். இதுகுறித்து காவல் நிலையத்தில் புகாரளிக்கப்பட்டதையடுத்து, காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருடுபோன பொருட்களின் மதிப்பு 10 லட்ச ரூபாய்க்கும் அதிகமாக இருக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: அஞ்சலக பெண் ஊழியரிடமிருந்து 5 சவரன் நகை பறிப்பு!