டாஸ்மாக் பணியாளர்களுக்கு பணியிடத்தில் முறையான பாதுகாப்பு வழங்க வேண்டும், டாஸ்மாக் பணியாளர்களை மதுபோதையில் தாக்குதல் நடத்தும் வாடிக்கையாளர்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
உழைப்பிற்கேற்ற ஊதியம் வழங்க வேண்டும், டாஸ்மாக் கடைகளின் ஆய்வுகளுக்கு கடை பணியாளர்களை வேலை வாங்குவதையும் நிறுத்த வேண்டும், டாஸ்மாக் நிர்வாகத்தில் சட்டத்துக்கு புறம்பாக நடைபெறும் கொள்ளையை தடுத்து நிறுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளர் சங்கம் சார்பில், விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் அருகில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளர் சங்க மாவட்ட தலைவர் அன்பழகன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாநில துணைத் தலைவர் வெ.சிவக்குமார் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். இதில் நூற்றுக்கும் மேற்பட்ட டாஸ்மாக் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.