உள்ளாட்சித் தேர்தல் முன்னேற்பாடு நடவடிக்கைகள் குறித்து விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் ஆ.அண்ணாதுரை, கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் கிரண்குராலா, கடலூர் மாவட்ட ஆட்சியர் எஸ்.அன்புச்செல்வன், திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் எஸ்.பிரபாகர் ஆகியோர் கலந்துகொண்ட ஆய்வுக் கூட்டம் விழுப்புரத்தில் நேற்று நடைபெற்றது.
தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையர் இரா. பழனிசாமி, செயலாளர் இல. சுப்பிரமணியன் ஆகியோர் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாடு பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டது.
மேலும் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்பு தேர்தல்களுக்காக விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், திருவண்ணாமலை மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் நியமிக்கப்பட்டுள்ள தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு விரிவான பயிற்சி அளிக்கப்பட்டது.
இதேபோல் உள்ளாட்சித் தேர்தலில் உரிய சட்ட விதிமுறைகளை பின்பற்றி தேர்தலை சுமுகமாகவும், அமைதியாகவும் நடத்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள மாவட்ட தேர்தல் அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டது.
இதையும் படிங்க: உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுமா? மறுவரையறை பணிகளை முடிக்க திமுக புதிய மனு!