ETV Bharat / state

அமைச்சர்களுடன் இட ஒதுக்கீடு குறித்து மட்டுமே பேசினேன்- ராமதாஸ்

விழுப்புரம்: அமைச்சர்களுடனான சந்திப்பின்போது வன்னியர் இட ஒதுக்கீடு பங்கீடு குறித்து மட்டுமே பேசப்பட்டது என்றும், வன்னியர் இடப்பங்கீடு கோரிக்கை நிறைவேற்றப்படும்வரை கூட்டணி குறித்த பேச்சுக்கே இடமில்லை என்றும் பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

author img

By

Published : Jan 11, 2021, 9:54 PM IST

ராமதாஸ்
ராமதாஸ்

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த தைலாபுரம் தோட்டத்தில் பாமக நிறுவனர் ராமதாசை தமிழ்நாடு அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி ஆகியோர் இன்று(ஜன.11) மதியம் சந்தித்து ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பேசினர்.

இந்த சந்திப்பின்போது, வன்னியர்களுக்கு 20 விழுக்காடு இட ஒதுக்கீடு குறித்தும், சட்டப்பேரவைத் தேர்தலில் பாமக அதிமுக கூட்டணியை தொடர்வது தொடர்பாகவும், அதிமுகவுடன் கூட்டணி தொடர்ந்தால் பாமகவிற்கு எத்தனை தொகுதிகள், எந்தெந்த தொகுதிகள் ஒதுக்கீடு செய்வது உள்ளிட்டை குறித்தும் ஆலோசனை செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகின.

ராமதாஸ் ட்விட்
ராமதாஸ் ட்விட்

இந்நிலையில், வன்னியர் இட ஒதுக்கீடு பங்கீடு குறித்து மட்டுமே அமைச்சர்களுடன் பேசப்பட்டது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

அதில், "தமிழ்நாடு அமைச்சர்கள் பி.தங்கமணி, எஸ்.பி.வேலுமணி ஆகியோர் இன்று என்னை தைலாபுரம் இல்லத்தில் சந்தித்துப் பேசினார்கள். வன்னியர்கள் இட ஒதுக்கீடு குறித்து பேசப்பட்டது. பொங்கல் திருநாளுக்குப் பிறகு மீண்டும் இதுகுறித்து பேசுவதாக அமைச்சர்கள் உறுதியளித்து சென்றுள்ளனர்.

அமைச்சர்களுடன் வன்னியர் இடப்பங்கீடு குறித்து மட்டும்தான் பேசப்பட்டது. அரசியலோ, தேர்தல் குறித்தோ பேசப்படவில்லை. வன்னியர் இடப்பங்கீடு கோரிக்கை நிறைவேற்றப்படும் வரை கூட்டணி குறித்த பேச்சுக்கே இடமில்லை என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.