தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பள்ளிகளைப் பாதுகாக்கவும், நீட் தேர்வுக்கு எதிராகவும் மாணவிகளின் மீதான பாலியல் கொடுமைகளுக்கு எதிராகவும் கண்டனம் தெரிவிக்கும் வகையில் சென்னை, கடலூர், கோவை, குமரி ஆகிய பகுதிகளிலிருந்து 1500 கிலோமீட்டர் தூரத்திற்கு இந்திய மாணவர் சங்கம் சார்பாக மிதிவண்டிப் பரப்புரைப் பயணம் மேற்கொண்டனர்.
இம்மாணவர்களுக்கு விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டையை அடுத்த கெடிலத்தில், விழுப்புரம் தெற்கு மாவட்ட இந்திய மாணவர் சங்கம் சார்பில் இளநீர், மோர், உள்ளிட்ட குளிர்பானங்கள் கொடுத்தும் மலர்கள் தூவியும் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இதில் மாநில, மாவட்ட நிர்வாகிகளும், ஏராளமான மாணவர்களும் கலந்துகொண்டனர்.