விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் அக்டோபர் 21ஆம் தேதி நடைபெறவுள்ளது. இன்றோடு தேர்தல் பரப்புரை நிறைவடைந்த நிலையில், திமுக தலைவர் ஸ்டாலின் இன்று அங்கு சூறாவளிப் பரப்புரை மேற்கொண்டார். அப்போது அவர், "அதிமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டது. பொள்ளாச்சி பாலியல் சம்பவம் அதற்கு சிறந்த எடுத்துக்காட்டு.
துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன்தான் அதில் முக்கியக் குற்றவாளி என்பது உங்கள் அனைவருக்கும் தெரியும். 250 அப்பாவி பெண்களின் எதிர்காலத்தை குற்றவாளிகள் நாசமாக்கியுள்ளனர்.
தன் ஆட்சிக்கு ஐ.எஸ்.ஐ. அங்கிகாரம் கிடைத்ததற்கு மகிழ்ச்சியாக உள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். உண்மை என்னவென்றால் அவரின் ஊழல் ஆட்சிக்குத்தான் ஐ.எஸ்.ஐ. அங்கீகாரம் கிடைத்துள்ளது. கடந்த எட்டு ஆண்டாக அதிமுக ஆட்சியில் உள்ளது. மூன்று ஆண்டாக உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படவில்லை. உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்பட்டால் திமுக வெற்றிபெற்றுவிடும், அவர்களால் கொள்ளை அடிக்க முடியாது என்பது அவர்களுக்குத் தெரியும்" என்றார்.