ETV Bharat / state

பெண் எஸ்பி பாலியல் தொல்லை வழக்கு: சிறப்பு டிஜிபி, முன்னாள் எஸ்பி ஆஜர்!

சிறப்பு டிஜிபி மற்றும் முன்னாள் எஸ்பி ஆகியோர் பத்திரிகையாளர்கள் தங்களை புகைப்படம் வீடியோ எடுப்பதை தடுக்க வேண்டும் என்று நீதிபதியிடம் முறையிட்டனர்.

sexual harassement issue - special dgp appeared in court

author img

By

Published : Sep 7, 2021, 5:12 PM IST

விழுப்புரம்: பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில், விழுப்புரம் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் செங்கல்பட்டு சிறப்பு டிஜிபி, முன்னாள் எஸ்பி ஆகியோர் ஆஜராகினர்.

பெண் எஸ்பி பாலியல் தொந்தரவு கொடுத்த புகாரில் சிறப்பு டிஜிபி மற்றும் செங்கல்பட்டு முன்னாள் எஸ்பி ஆகியோர் மீது, விழுப்புரம் சிபிசிஐடி போலீசார் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து, 400 பக்கங்கள் கொண்ட குற்றப் பத்திரிகையை, விழுப்புரம் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர்.

கடந்த இரண்டாம் தேதி இந்த வழக்கு விசாரணை விழுப்புரம் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்றது. அப்போது சிறப்பு டிஜிபி ஆஜராகவில்லை, முன்னாள் எஸ்பி மட்டும் ஆஜராகியிருந்தார். அதனைத் தொடர்ந்து வழக்கு விசாரணையை செப்டம்பர் 7ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி அப்போது அறிவித்தார்.

அதன்படி இன்று வழக்கு விசாரணை தொடங்கியது, சிறப்பு டிஜிபி, முன்னாள் எஸ்பி ஆகியோர நேரில் ஆஜராகினர். அதன் பின்னர் இந்த வழக்கு விசாரணையை நீதிபதி கோபிநாதன் இந்த மாதம் 14ஆம் தேதிக்கு ஒத்திவைத்து அறிவித்தார்.

சிறப்பு டிஜிபி மற்றும் முன்னாள் எஸ்பி ஆகியோர் பத்திரிகையாளர்கள் தங்களை புகைப்படம் வீடியோ எடுப்பதை தடுக்க வேண்டும் என்று நீதிபதியிடம் முறையிட்டனர்.

இதையும் படிங்க: போக்குவரத்து புலனாய்வு காவலர் விபத்தில் உயிரிழப்பு - பதறவைக்கும் சிசிடிவி காட்சி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.