விழுப்புரம் மாவட்டம் அரகண்டநல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட திருக்கோவிலூர் வேட்டவலம் சாலையில் வியாழக்கிழமை அதிகாலை 4 மணியளவில் அரகண்டநல்லூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் திருமால் தலைமையிலான காவல் துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது வேட்டவலத்திலிருந்து வீரப்பாண்டி நோக்கி இருசக்கர வாகனத்தில் வந்த, வீரப்பாண்டி மன்மதன் கோவில் தெருவைச் சேர்ந்த ரியாஸ் என்பவரை நிறுத்தி சோதனை செய்தனர்.
சோதனையில் இருசக்கர வாகனத்தில் இருந்த மூட்டையில் 37 கிலோ எடைகொண்ட ரூ.50 ஆயிரம் மதிப்பிலான தடைசெய்யப்பட்ட குட்கா பான்மசாலா பொருட்களை எடுத்துச் சென்றது தெரியவந்தது.
இதனையடுத்து ரியாஸை கைது செய்த காவல் துறையினர் விசாரணை நடத்தினர். விசாரணையில் பெங்களூருவில் உள்ள சேட்டு என்பவரிடமிருந்து வாங்கியதாகவும், தனியார் பேருந்தின் மூலம் பான்மசாலா பொருட்கள் வேட்டவலம் அனுப்பிவைக்கப்பட்டதும் தெரியவந்தது.
கைது செய்யப்பட்ட ரியாஸின் மளிகைக் கடையை கடந்த மாதம் உணவுப் பாதுகாப்புத் துறை அலுவலர்களால் சீல் வைத்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க...
தன் உயிர் கொடுத்து பெண் உயிரைக் காப்பாற்றிய இளைஞரின் குடும்பத்திற்கு நிதி!