விழுப்புரம் மாவட்ட பெருந்திட்ட வளாகத்தில் உள்ள மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் வைத்துள்ள சேமிப்பு கிடங்கில் 4117 பேலட் யூனிட், 3149 கண்ரோல் யூனிட், 3432 வி.வி.பேட் இயந்திரம் வைக்கப்பட்டுள்ளது. இதில், பெல் நிறுவத்தைச் சேர்ந்த ஊழியர்கள், வருவாய்த் துறையினர் 2019ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் பயன்படுத்தப்பட்ட இயந்திரத்தில் உள்ள சின்னங்களை அகற்றும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், திமுக, அதிமுக, பாஜக உள்ளிட்ட அரசியல் கட்சியினர் முன்னிலையில் மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை தலைமையில் மின்னணு வாக்கு இயந்திரம் குறித்த முதல்கட்ட பரிசோதனை இன்று (டிசம்பர் 16) நடைபெற்றது.
அது குறித்து ஆட்சியர் அண்ணாதுரை கூறுகையில், "இயந்திரங்கள் சரியாக உள்ளதா என்பது குறித்த பணி தற்போது நடைபெற்று வருகின்றன. அதில், பெல் நிறுவனத்தைச் சேர்ந்த 10 பொறியாளர்கள், வருவாய்த்துறை ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். மத்திய பிரதேசத்தில் இருந்து மின்னணு இயந்திரம் வந்து கொண்டிருக்கின்றன. இந்த பணி 10 நாட்களில் நிறைவடையும்" என்றார்.