ETV Bharat / state

தேர்தலில் பாமக தோல்வி குறித்த கேள்விக்கு நழுவிய ராமதாஸ்!

விழுப்புரம்: காடுவெட்டி குருவின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி அவரது சிலைக்கு மாலை அணிவித்த பாமக நிறுவனர் ராமதாஸிடம், பாமக போட்டியிட்ட அனைத்துத் தொகுதிகளிலும் தோல்வியடைந்தது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலேதும் தெரிவிக்காமல் புறப்பட்டுச் சென்றார்.

author img

By

Published : May 25, 2019, 4:50 PM IST

Updated : May 26, 2019, 8:49 AM IST

guru

மறைந்த வன்னியர் சங்கத் தலைவர் காடுவெட்டி குருவின் முதலாம் ஆண்டு நினைவு தினம் மே 25ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது. இதையடுத்து பாமகவினர் அவரது படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திவருகின்றனர். இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்டம் கோனேரிகுப்பத்தில் உள்ள காடுவெட்டி குருவின் சிலைக்கு பாமக நிறுவனர் ராமதாஸ், அக்கட்சியின் இளைஞரணித் தலைவர் அன்புமணி ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

அதைத்தொடர்ந்து செய்தியாளரிடம் பேசிய ராமதாஸ், இந்தியாவின் பிரதமராக இரண்டாவது முறையாக பொறுப்பேற்க உள்ள நரேந்திர மோடிக்கு தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

அப்போது தமிழ்நாட்டில் பாமக போட்டியிட்ட அனைத்துத் தொகுதிகளிலும் தோல்வியைத் தழுவியது குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு, பதில் எதுவும் சொல்லாமல் ராமதாஸ் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.

மறைந்த வன்னியர் சங்க தலைவர் ஜெ.குருவின் முதலாம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.

இதையடுத்து தமிழகம் முழுவதும் உள்ள பாமகவினர் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்டம் கோனேரிகுப்பத்தில் உள்ள ஜெ.குருவின் திருவுருவச் சிலைக்கு பாமக நிறுவனர் ராமதாஸ், அக்கட்சியின் இளைஞரணித் தலைவர் அன்புமணி ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

அதைத்தொடர்ந்து செய்தியாளரிடம் பேசிய ராமதாஸ்., 

'இந்தியாவின் பிரதமராக இரண்டாவது முறையாக பொறுப்பேற்க உள்ள நரேந்திர மோடி தனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார். 

அப்போது தமிழகத்தில் அதிமுக  கூட்டணியின் தோல்வி குறித்தும், பாமகவின் தோல்வி குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். ஆனால், இந்த கேள்விகளுக்கு பதில் சொல்லாமல் ராமதாஸ் அங்கிருந்து கிளம்பினார்.
Last Updated : May 26, 2019, 8:49 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.