விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் ஜெயபுரம் துணை கண்காணிப்பாளர் அலுவலகம் அருகே இளைஞர் ஒருவர் வீடு வீடாக எட்டிப் பார்த்துக் கொண்டு செல்வதாக அப்பகுதியில் உள்ளவர்கள் கூச்சலிட்டனர். இதனால் அங்குகூடிய பொதுமக்கள் அந்த இளைஞரை பிடித்து சரமாரியாக தாக்கினர். பின்னர் இதுகுறித்து திண்டிவனம் காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்த தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவலர்கள் அந்த இளைஞரை மீட்டு காவல்நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில், அந்த இளைஞர் வடமாநிலத்தை சேர்ந்தவர் என்றும் சற்று மனநலம் பாதிக்கப்பட்ட இருப்பதும் தெரியவந்தது. இதனையடுத்து அந்த இளைஞரை காவல்துறையினர் காவல் நிலையத்திலிருந்து அனுப்பி வைத்தனர்.
இதையும் படிங்க: ஏடிஎம்மில் திருட முயன்ற வடமாநில இளைஞர் கைது!