ETV Bharat / state

போலி மருத்துவர்கள் கைது! சுகாதாரத்துறை அதிரடி - health department

விழுப்புரம்: சூரப்பட்டு பகுதியில் 8ஆம் வகுப்பு படித்து விட்டு மருத்துவம் பார்த்த போலி மருத்துவர்கள் இருவரை, காவல்துறையினர் கைது செய்தனர்.

போலி மருத்துவர்கள் கைது
author img

By

Published : Jul 17, 2019, 12:13 PM IST

விழுப்புரம் அருகிலுள்ள சூரப்பட்டு பகுதியில் இயங்கி வரும் சகுந்தலா மருந்தகத்தில் உரிய அனுமதியின்றி, பொதுமக்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுவதாக சுகாதாரத்துறைக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், சம்பவ இடத்துக்கு விரைந்த சுகாதாரத்துறை இணை இயக்குனர் சுகந்தி தலைமையிலான குழுவினர், சகுந்தலா மருந்தகத்தில் ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது சிவநேசன் என்பவர் மருந்தகம் நடத்திக்கொண்டே அப்பகுதி மக்களுக்கு மருத்துவம் பார்த்தது தெரியவந்தது. மேலும் அதே பகுதியில் டெல்பினா என்பவர் 8ஆம் வகுப்பு வரை படித்துவிட்டு மருந்தகம் நடத்திக்கொண்டே நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வந்துள்ளார்.

இதையடுத்து உடனடியாக கடையில் இருந்த மருத்து, மாத்திரைகள் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்த சுகாதாரத்துறை குழுவினர், சிவநேசன், டெல்பினா ஆகிய இருவரையும் காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். அதன்பின் இரண்டு மருந்தகங்களுக்கும் சீல் வைக்கபட்டது. இருவர் மீதும் வழக்குப் பதிவு செய்த கெடார் காவல்துறையினர் விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.

ஒரே நேரத்தில் இரண்டு போலி மருத்துவர்கள் கைது செய்யப்பட்ட சம்பவம் சூரப்பட்டு பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Intro:விழுப்புரம்: சூரப்பட்டு பகுதியில் எட்டாம் வகுப்பு மற்றும் பி,பார்ம் படித்துவிட்டு மருத்துவம் பார்த்துவந்த இரண்டு போலி மருத்துவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Body:விழுப்புரம் அருகிலுள்ள சூரப்பட்டு பகுதியில் இயங்கிவரும் மருந்தகத்தில் உரிய அனுமதியின்றி, பொதுமக்களுக்கு மருத்துவம் பார்க்கப்படுவதாக சுகாதாரத்துறையிருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து சுகாதாரத்துறை இணை இயக்குநர் சுகந்தி தலைமையில் சென்ற குழுவினர் சூரப்பட்டு பகுதியில் உள்ள சகுந்தலா மருந்தகத்தில் ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது சிவநேசன் என்பவர் மருந்தகம் நடத்திக்கொண்டே அப்பகுதி மக்களுக்கு மருத்துவம் பார்த்துவந்தது தெரியவந்தது.

மேலும் அதே பகுதியில் டெல்பினா என்பவர் எட்டாம் வகுப்பு வரை படித்துவிட்டு மருந்தகம் நடத்திக்கொண்டே பொதுமக்களுக்கு மருத்துவம் பார்த்து வந்துள்ளார்.

இதையடுத்து உடனடியாக கடையில் இருந்த மருத்து, மாத்திரைகள் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்த சுகாதாரத்துறையினர் சிவனேசன், டெல்பினா இருவரையும் காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

மேலும் இரண்டு மருந்தகங்களுக்கும் சீல் வைக்கபட்டது. இருவர் மீதும் வழக்கும் பதிவு செய்துள்ள கெடார் காவல்துறையினர் விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.

Conclusion:ஒரே நேரத்தில் இரண்டு போலி மருத்துவர்கள் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் சூரப்பட்டு பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.