ETV Bharat / state

'8ஆவது ஊதியக் குழு நிலுவைத் தொகையை வழங்குக' - goverment

விழுப்புரம்: எட்டாவது ஊதியக் குழு நிலுவைத் தொகையை வழங்கிட வேண்டும் உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசுப் பணியாளர் சங்கத்தினர் விழுப்புரத்தில் இன்று வண்ண சட்டை அணிந்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வண்ண சட்டை அணிந்து போராட்டம்
author img

By

Published : Jul 17, 2019, 5:14 PM IST

தமிழ்நாடு அரசுப் பணியாளர் சங்கத்தினர் இன்று விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்தின்போது அவர்கள் முழங்கிய கோரிக்கைகள்:

  • எட்டாவது ஊதியக் குழு நிலுவைத் தொகையை வழங்கிட வேண்டும்.
  • புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும்.
  • மத்திய அரசு பணியாளர்களுக்கு இணையான சலுகைகளை வழங்கிட வேண்டும்.
  • பொது விநியோகத் திட்டத்துக்கென தனித் துறையை உருவாக்க வேண்டும்.
  • டாஸ்மாக் பணியாளர்களை பணி நிரந்தரம் செய்து காலமுறை ஊதியம் வழங்கிட வேண்டும்.
  • அனைத்து துறைகளிலும் உள்ள காலிப்பணியிடங்களை முழுமையாக உடனடியாக நிரப்பிட வேண்டும்.
  • பணி நியமனம், பணியிட மாறுதல், பதவி உயர்வு ஆகியவற்றில் உள்ள முறைகேடுகளைக் களைய வேண்டும்
    தமிழ்நாடு அரசுப் பணியாளர் சங்கத்தினரின் போராட்டம்

தமிழ்நாடு அரசுப் பணியாளர் சங்கத்தின் மாநில துணைத் தலைவர் சிவக்குமார் தலைமையில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில் 100-க்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டனர்.

Intro:விழுப்புரம்: 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசுப் பணியாளர் சங்கத்தினர் விழுப்புரத்தில் இன்று வண்ண சட்டை அணிந்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Body:8வது ஊதிய குழு நிலுவைத் தொகையை வழங்கிட வேண்டும். புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். மத்திய அரசு பணியாளர்களுக்கு இணையான சலுகைகளை வழங்கிட வேண்டும். பொது விநியோகத் திட்டத்துக்கு என தனித்துறை உருவாக்க வேண்டும்.

மேலும் டாஸ்மாக் பணியாளர்களை பணி நிரந்தரம் செய்து காலமுறை ஊதியம் வழங்கிட வேண்டும். அனைத்து துறைகளிலும் உள்ள காலிப்பணியிடங்களை முழுமையாக உடனடியாக நிரப்பிட வேண்டும். பணி நியமனம், பணியிட மாறுதல், பதவி உயர்வு ஆகியவற்றில் உள்ள குறைபாடுகள் மற்றும் முறைகேடுகளை களைய வேண்டும் என்பன உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கம் சார்பில் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் சங்கத்தின் மாநில துணைத் தலைவர் சிவக்குமார் தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் 100க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு மாநில அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.

Conclusion:இந்த போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் சிவப்பு சட்டை, வெள்ளை நிற தொப்பி அணிந்து நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.