விழுப்புரம், கிளியனூர் காவல் நிலைய ஆய்வாளர் மைக்கேல்ராஜ் தலைமையிலான காவல் துறையினர் நேற்றிரவு, புதுச்சேரி- திண்டிவனம் சாலையில் உள்ள தைலாபுரம் பகுதியில், வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த சொகுசுக் காரை நிறுத்தியபோது, அந்தக் கார் நிற்காமல் வேகமாக சென்றுள்ளது.
இது குறித்து தகவலறிந்த உதவி காவல் ஆய்வாளர் பாபு, நல்லாவூர் பகுதியில் சென்று கொண்டிருந்த காரை மடக்கி நிறுத்தியுள்ளார். அப்போது காரை நிறுத்திவிட்டு ஓட்டுநர் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார்.
இதையடுத்து அந்த காரை சோதனை செய்ததில், அதில் 816 புதுச்சேரி மதுப் பாட்டில்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர், அவற்றைப் பறிமுதல் செய்த காவல் துறையினர், தப்பியோடிய ஓட்டுநரைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க: நாகையில் சட்டவிரோத மது கடத்தல்: இருவர் கைது, 2500 பாட்டில்கள் பறிமுதல்