ETV Bharat / state

சீல் வைத்து எடுத்துச் செல்லப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள்!

author img

By

Published : Oct 21, 2019, 11:08 PM IST

விழுப்புரம்: விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலுக்கு பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனைத்து அரசியல் கட்சிப் பிரதிநிதிகள் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டது.

வாக்குப்பதிவு இயந்திரங்கள்

தமிழ்நாட்டில் நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் இன்று நடைபெற்றது. இதற்காக விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதி முழுவதும் 275 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்தப் பணியில் ஆயிரத்து 331 அரசு ஊழியர்கள் ஈடுபட்டனர். மாலை 5 மணி நிலவரப்படி விக்கிரவாண்டி தொகுதியில் 76.41 விழுக்காடு வாக்குகள் பதிவாகின.

இதைத்தொடர்ந்து மாலை 6 மணி அளவில் வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு சீல் வைக்கும் பணி அனைத்து அரசியல் கட்சி நிர்வாகிகள் முன்னிலையில் நடைபெற்றது. சீல் வைக்கப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள் பலத்த காவல் துறையினர் பாதுகாப்புடன் கொண்டுசெல்லப்பட்டு வாக்கு எண்ணும் மையமான திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் வைக்கப்பட்டுள்ளது.

சீல் வைத்து எடுத்துச் செல்லப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள்

வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள தனியார் கல்லூரிக்கு மூன்றடுக்குப் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் வருகிற 24ஆம் தேதி எண்ணப்பட்டு அன்று மாலையே முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

இதையும் படிங்க: இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு

Intro:விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலுக்கு பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனைத்து அரசியல் கட்சிப் பிரதிநிதிகள் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டது.Body:விக்கிரவாண்டி தொகுதிக்கான இடைத்தேர்தல் இன்று நடைபெற்றது. இதற்காக தொகுதி முழுவதும் 275 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு வாக்குப்பதிவு நடைபெற்று வந்தது. இந்த பணியில் 1,331 அரசு ஊழியர்கள் ஈடுபட்டு வந்தனர்.

மாலை 5 மணி நிலவரப்படி விக்கிரவாண்டி தொகுதியில் 76.41% வாக்குகள் பதிவாகின.

இதைதொடர்ந்து மாலை 6 மணி அளவில் வாக்குப்பதிவு எந்திரங்களுக்கு சீல் வைக்கும் பணி அனைத்து அரசியல் கட்சி நிர்வாகிகள் முன்னிலையில் நடைபெற்றது.

சீல் வைக்கப்பட்ட வாக்குப்பதிவு எந்திரங்கள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டு வாக்கு எண்ணும் மையமான திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் வைக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து அந்த பகுதியில் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Conclusion:தேர்தலில் பதிவான வாக்குகள் வருகிற 24-ஆம் தேதி எண்ணப்பட்டு அன்று மாலையே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.