ETV Bharat / state

‘ஏடிஎம் இயந்திரத்தில் ஏன் பணம் வரவில்லை’ -  கோபத்தில் பேருந்து கண்ணாடியை உடைத்த போதை ஆசாமி - போதை ஆசாமி ரகளை

ஏடிஎம் இயந்திரத்தில் பணம் வரவில்லை என்று கூறி பேருந்தின் கண்ணாடியை உடைத்து ரகளை செய்த போதை ஆசாமியிடம் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Feb 19, 2023, 8:23 PM IST

ரகளையில் ஈடுபட்ட போதை ஆசாமி

விழுப்புரம்: திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள ஆனத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் நாகராஜ் (42). இவர் நேற்று (பிப்.18) மதியம் 3 மணியளவில் மதுபோதையில் ஆனத்தூரில் இருந்த ஏடிஎம் மையத்துக்கு பணம் எடுக்கச் சென்றார். அச்சமயம் ஏடிஎம் இயந்திரத்தில் போதுமான அளவு பணம் இல்லாததால் இவரால் பணம் எடுக்க முடியவில்லை.

இதனையடுத்து, வங்கி ஊழியர்களிடம் பணம் ஏன் வரவில்லை என்று கேட்டு, அவர்களிடம் பிரச்னை செய்துள்ளார். அதன்பின் வெளியே வந்து அரசூர் - பண்ருட்டி சாலையில் நின்று ரகளையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது விழுப்புரத்தில் இருந்து அரசூர் வழியாக பண்ருட்டி நோக்கி வந்த அரசு டவுன் பேருந்தை வழிமறித்து ஏன் பணம் வரவில்லை என்று ஓட்டுநரிடம் கேட்டு தகராறில் ஈடுபட்டார்.

அச்சமயம் பேருந்தில் ஓட்டுநர் சக்திவேல், உன்னால் முடிந்தால் பஸ் கண்ணாடியை உடைத்துப் பார் என்று கூறவே போதை தலைக்கேறிய நாகராஜ் பேருந்தின் முன்பக்க கண்ணாடி மீது கல்வீசி பேருந்து கண்ணாடியை உடைத்துள்ளார்.

அதோடு மட்டுமில்லாமல் ஓட்டுநர் மற்றும் நடத்துநர் ஆகிய இருவரையும் தாக்கியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து தகவலறிந்த திருவெண்ணெய்நல்லூர் காவல் துறையினர் விசாரணை நடத்தினர். விசாரணையில், நாகராஜ் சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பது தெரியவந்தது. தொடர்ந்து இதுகுறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: வாக்கு சேகரிப்பில் திமுக, நாதக இடையே மோதல்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.