ETV Bharat / state

சென்னை எழில்மிகு நகராக மாற செய்ய வேண்டியது என்ன? - அன்புமணி ராமதாஸ் ஆலோசனை!

ஆளுநர், முதலமைச்சர் ஆகியோர் ஒன்றாக இணைந்து மக்களின் மேம்பாட்டுக்காக செயல்பட வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

சென்னை எழில்மிகு நகராக மாற செய்ய வேண்டியது என்ன? - அன்புமணி ராமதாஸ் ஆலோசனை!
சென்னை எழில்மிகு நகராக மாற செய்ய வேண்டியது என்ன? - அன்புமணி ராமதாஸ் ஆலோசனை!
author img

By

Published : Nov 7, 2022, 12:51 PM IST

Updated : Nov 7, 2022, 2:03 PM IST

விழுப்புரத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக்கொண்ட பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது:
"தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தற்பொழுது தீவிரமடைந்து வருகிறது. இந்நிலையில் சென்னை மற்றும் அதனைச் சார்ந்த பகுதிகளில் மழைநீர் வடிநீர் வாய்கால்களை சீர்படுத்த வேண்டும் என நான் மற்றும் பாமக நிறுவனர் ராமதாஸ், கடந்த 8 மாத காலமாக தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்தும் உரிய நடவடிக்கைகள் இதுவரை எடுக்கவில்லை.

சென்னையில் மழைநீர் வடிகால் சீரமைப்புப் பணிகள் 90 சதவிதம் முடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் 50 சதவித பணிகள் மட்டுமே முடிக்கப்பட்டுள்ளது. புதிய தொழில்நுட்பங்களையும் நடைமுறைப்படுத்தினால் தான் சென்னை எழில்மிகு நகராக மாற்றம் பெறும். ஸ்மார்ட் சிட்டி என்கிறார்கள் பெயரளவிற்கு மட்டுமே சென்னை தற்போது ஸ்மார்ட் சிட்டியாக உள்ளது.

ஒரு மாநிலத்தில் மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசுக்கு ஜனநாயக அடிப்படையில் மட்டுமே முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும். நிர்வாகம் மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசிடம் தான் இருக்கும். ஆளுநர் இதில் குறுக்கிடவோ, எதிர்ப்புகளை காட்டவோ கூடாது. ஆளுநரின் பணி என்பது அரசால் மேற்கொள்ளப்படும் திட்டங்களை தேவைப்பட்டால் ஆய்வு செய்து அதில் ஏதேனும் குறைகள் இருந்தால் அதை அரசிடம் தெரிவித்து, குறைகளை நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், மாநில முதல்வரும், ஆளுநரும் தமிழக மக்களின் நலனை மட்டுமே கருத்தில் கொண்டு அவர்களின் வாழ்வாதாரத்தை எவ்வாறு மேம்படுத்தலாம் என்பதை கருத்தில் கொண்டு ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். அப்போது மக்களுக்கு நன்மை கிடைக்கும்.

2026-ஆம் ஆண்டு தமிழகத்தில் பாமக தலைமையில் ஆட்சியை அமைப்போம். அதற்கான வியூகங்களை அமைத்து செயல்பட்டு வருகிறோம். அதற்கேற்றபடியான நடவடிக்கைகளையே 2024-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலிலும் கடைப்பிடிப்போம்" இவ்வாறு கூறினார்.

இந்த செய்தியாளர் சந்திப்பின் போது மயிலம் எம்.எல்.ஏ சிவக்குமார், மாவட்ட செயலாளர் பாலசக்தி, மாவட்டத் தலைவர்கள் தங்க ஜோதி, புகழேந்தி உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.

Last Updated : Nov 7, 2022, 2:03 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.