விழுப்புரம்: விழுப்புரம், திருக்கோவிலூர், விக்கிரவாண்டி ஆகிய மூன்று சட்டப்பேரவைத் தொகுதிகளின் பாமக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் தலைமையில் விழுப்புரம் ஆனந்தா திருமண மண்டபத்தில் நடைபெற இருந்த நிலையில் தொடர் மழையின் காரணமாக ரத்துசெய்யப்பட்டுள்ளது.
விழுப்புரம் நகரில் நேற்றிரவு முதல் பெய்துவரும் தொடர் மழையின் காரணமாக ஆலோசனைக் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
கட்சியினர் சூளுரை ஏற்க வேண்டும்
2026ஆம் ஆண்டு வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் பாமக தமிழ்நாட்டில் 60 தொகுதிகளில் வெற்றிபெற வேண்டும். இதன்மூலம் அன்புமணி ராமதாஸ் தமிழ்நாட்டின் அடுத்த முதலமைச்சராக அமரவைக்கக் கட்சியினர் சூளுரை ஏற்க வேண்டும். இதற்காகத் தொண்டர்கள் திண்ணை பரப்புரை, சமூக வலைதளங்களை அதிகமாகப் பயன்படுத்தி மக்களிடையே செல்ல வேண்டும்.
பாமக தொண்டர்கள் மக்களுக்கு எவ்வாறு உதவிட வேண்டும்
மேலும், வருகின்ற நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் வெற்றிபெற கட்சியில் தற்போது தொண்டர்களின் முக்கியப் பணி, தற்பொழுது பெய்துவரும் கன மழை வெள்ள பாதிப்பு சூழலில் பாமக தொண்டர்கள் மக்களுக்கு எவ்வாறு உதவிட வேண்டும் என்று ராமதாஸ் மாவட்டந்தோறும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தொண்டர்களிடம் ஆலோசனை வழங்கி கூட்டம் நடத்திவருகிறார்.
இந்த நிலையில், இன்று (நவம்பர் 28) அதுபோல விழுப்புரம் மாவட்டத்தில் கலந்துரையாடல் நடைபெற இருந்த நிலையில் கனமழை காரணமாகத் தொண்டர்களின் நலன்கருதி ஆலோசனைக் கூட்டம் ரத்துசெய்யப்பட்டது என பாமக தலைமைக்கழகம் அறிவித்துள்ளது.
இதையும் படிங்க: 10.5 விழுக்காடு உள் ஒதுக்கீடு பிரச்சனை; தடை உத்தரவு கிடைக்கும் - பாமக நிறுவனர் ராமதாஸ்