விழுப்புரம்: செஞ்சி அருகே வடபட்டி கிராமத்தைச் சேர்ந்த தனசேகர் என்பவரின் மகள் சத்தியவதி தேவனூரில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் நேற்று பொதுத்தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், தான் மூன்று பாடங்களில் தோல்வி அடைந்ததை அறிந்து நேற்று (ஜூன்20) வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதேபோல தேவனுரை சேர்ந்த பரமேஸ்வரி என்ற மாணவி 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், தான் தேர்ச்சியடையாததை அறிந்து மனமுடைந்து விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். அவரை மேல் சிகிச்சைக்காக சேத்துபட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
![தற்கொலை எதற்கும் தீர்வல்ல.. மறவாதீர்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/15615281_vlpm.jpg)
இதேபோல் பாலப்பட்டி என்னும் மற்றொரு கிராமத்தைச் சேர்ந்த கிஷோர் என்ற மாணவன் 12ஆம் வகுப்பில் தேர்ச்சியடையாததை அறிந்து விஷம் அருந்தி தற்கொலைக்கு முயற்சித்தார். பின், அவனை செஞ்சி அரசு கல்லூரி மருத்துவமனைக்கும் பின்னர் மேல் சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதையும் படிங்க: 12ஆம் வகுப்பில் தோல்வியடைந்த பலர் நீதிபதிகளாக உள்ளனர் - டிஜிபி சைலேந்திரபாபு நம்பிக்கைப்பேச்சு!