ETV Bharat / state

பெட்ரோல் நிலைய மேலாளர் வெட்டிக்கொலை - Petrol station manager murder

விழுப்புரம்: பட்டப்பகலில் பெட்ரோல் நிலைய மேலாளர் வெட்டிக்கொலைசெய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பெட்ரோல் நிலைய மேலாளர் வெட்டிக்கொலை
Petrol station manager murder
author img

By

Published : Feb 4, 2020, 2:09 PM IST

விழுப்புரம் - புதுச்சேரி சாலையில் உள்ள கம்பன் நகரில் தனியாருக்குச் சொந்தமான பெட்ரோல் நிலையம் செயல்பட்டுவருகிறது. இங்கு கடலூர் மாவட்டம் பண்ருட்டியை அடுத்த பனப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த சீனுவாசன் என்பவர் கடந்த 10 ஆண்டுகளாக மேலாளராகப் பணியாற்றிவருகிறார்.

இந்நிலையில் இன்று காலை வழக்கம்போல் சீனுவாசன் பணியில் இருந்துள்ளார். அப்போது பெட்ரோல் நிலையத்துக்கு காரில் வந்த அடையாளம் தெரியாத நபர்களில் ஒருவர் நேராக மேலாளர் சீனுவாசனின் அறைக்குச் சென்று, இரண்டு வெடிகுண்டுகளை வீசி கொலைசெய்ய முயன்றுள்ளார்.

பெட்ரோல் நிலைய மேலாளர் வெட்டிக்கொலை

ஆனால், வெடிகுண்டுகள் வெடிக்காமல் போகவே, தான் மறைத்துவைத்திருந்த அரிவாளால் சீனுவாசனை சராமரியாக வெட்டி கொலை செய்துவிட்டு காரில் தப்பிச்சென்றுள்ளனர்.

இதில் சம்பவ இடத்திலேயே சீனுவாசன் பரிதாபமாக உயிரிழந்தார். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த காவல் துறையினர் சீனிவாசனின் சடலத்தைக் கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக முண்டியம்பாக்கம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

பெட்ரோல் நிலைய மேலாளர் வெட்டிக்கொலை

மேலும் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள காவல் துறையினர், சிசிடிவி காட்சிகள், தடயவியல் நிபுணர்கள், மோப்ப நாய்கள் உதவியுடன் குற்றவாளிகளை தேடிவருகின்றனர்.

இதையும் படிங்க: எழும்பூரில் ரயிலில் அடிபட்டு இளைஞர் உயிரிழப்பு...!

Intro:விழுப்புரத்தில் பட்டப்பகலில் பெட்ரோல் நிலைய மேலாளர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Body:விழுப்புரம் - புதுச்சேரி சாலையில் உள்ள கம்பன் நகரில் தனியாருக்கு சொந்தமான பெட்ரோல் நிலையம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு கடலூர் மாவட்டம் பண்ருட்டியை அடுத்த பனப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த சீனுவாசன் என்பவர் கடந்த 10 வருடங்களாக மேலாளராக பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில் இன்று காலை வழக்கம்போல் சீனுவாசன் பணியில் இருந்துள்ளார். அப்போது பெட்ரோல் நிலையத்துக்கு காரில் வந்த மர்ம நபர்களில் ஒருவர் நேராக மேலாளர் சீனுவாசனின் அறைக்கு சென்று, இரண்டு வெடிகுண்டுகளை வீசி கொலை செய்ய முயன்றுள்ளார்.

ஆனால், வெடிகுண்டுகள் வெடிக்காமல் போகவே, தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் அவரை சராமரியாக வெட்டி கொலை செய்துவிட்டு காரில் தப்பிச்சென்றுள்ளனர்.

இதில் சம்பவ இடத்திலேயே சீனிவாசன் பரிதாபமாக உயிர் இழந்தார். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு போலீஸார் சீனுவாசனின் சடலத்தை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக முண்டியம்பாக்கம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீஸார், சிசிடிவி காட்சிகள், தடயவியல் நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய்கள் உதவியுடன் குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.

Conclusion:பட்டப்பகலில் நடைபெற்ற இந்த கொலை சம்பவம் விழுப்புரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.