இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்., "தேசிய மற்றும் பன்னாட்டு அளவில் பல்வேறு துறைகளில் தலை சிறந்து விளங்குபவர்களுக்கும், சாதனை புரிந்தவர்களுக்கும் பத்ம விருதுகள் வழங்கப்படுகிறது.
இவ்விருதுக்கு கலை, சமூகப்பணி, பொதுசேவை, அறிவியல், பொறியியல், வர்த்தகம், தொழில், மருத்துவம், இலக்கியம், கல்வி, அரசு குடிமைப்பணி, விளையாட்டு, மற்றும் இதர துறைகளில் தேசிய மற்றும் பன்னாட்டு அளவில் சாதனை புரிந்தவர்கள் தகுதி உடையவர்கள்.
பத்ம விருதுகளான பத்ம விபூசண், பத்ம பூஷண் மற்றும் பத்மஸ்ரீ ஆகிய விருதுகள் இந்திய அரசால் வருகின்ற 2021ஆம் ஆண்டு ஜனவரி 26ஆம் தேதி குடியரசு தினத்தன்று வழங்கப்பட உள்ளது.
எனவே விழுப்புரம் மாவட்டத்தில் விளையாட்டு துறையில் தேசிய மற்றும் பன்னாட்டு அளவில் சாதனை புரிந்தவர்கள் இந்த விருதுக்கு விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பங்கள் மற்றும் இதர விவரங்கள் பெற இணையதள முகவரியான www.padmaawards.gov.in என்ற மின்னஞ்சல் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
பூர்த்தி செய்த விண்ணப்பங்கள் மற்றும் கையேடுகளை செப்டம்பர் 2ஆம் தேதிக்குள் விழுப்புரம் மாவட்ட விளையாட்டு அலுவலகத்தில் நேரில் சமர்ப்பிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறது" என தெரிவிக்கப்பட்டுள்ளது.