ETV Bharat / state

சின்னசேலம் ஊராட்சியில் லஞ்ச ஒழிப்புத் துறை திடீர் சோதனை! - லஞ்ச ஒழிப்பு காவல் துறையினர்

விழுப்புரம்: சின்னசேலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு காவல் துறையினர் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு காவல் துறையினர் திடீர் சோதனை
author img

By

Published : Oct 4, 2019, 8:57 AM IST

விழுப்புரம் மாவட்டம் சின்னசேலம் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் வீராங்கன் மீது பல்வேறு முறைகேடு குற்றச்சாட்டுகள் லஞ்ச ஒழிப்பு காவல் துறையினருக்கு வந்தது.

இதையடுத்து லஞ்ச ஒழிப்பு காவல் துறையினர் சின்னசேலம் ஊராட்சி ஒன்றியத்தில் திடீர் சோதனை நடத்தினர். அப்போது அலுவலகத்திலிருந்த கிராம ஊராட்சி செயலர்கள், பொதுமக்களை அலுவலகத்திற்குள்ளேயே வைத்து பூட்டிவைத்தனர்.

ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு காவல் துறையினர் வந்ததைத் கண்ட அலுவலர்கள் கையிலிருந்த பணத்தை அலுவலக ஜன்னல் வழியாக பின்புறம் தூக்கி வீசியுள்ளனர். இதனைப் பார்த்த லஞ்ச ஒழிப்புத் துறையினர் அலுவலகம் பின்புறம் சென்று பணத்தை பறிமுதல் செய்தனர்.

லஞ்ச ஒழிப்பு காவல் துறையினரின் சோதனையில் ஒரு லட்சத்து 44 ஆயிரத்து 150 ரூபாய் கணக்கில் வராத பணம் கைப்பற்றப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு காவல் துறையினர் திடீர் சோதனை

இதையும் படிங்க: போலி டீ தூள் கம்பெனிக்கு சீல்!

Intro:tn_vpm_01_chinnselam_vigilance_raid_vis_tn10026Body:tn_vpm_01_chinnselam_vigilance_raid_vis_tn10026Conclusion:சின்னசேலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை

 விழுப்புரம் மாவட்டம் சின்னசேலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் விழுப்புரம்  மற்றும் கடலூர் லஞ்ச ஒழிப்பு டிஎஸ்பி மெல்வின்ராஜா தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் திருவேங்கடம் மாலா மற்றும் போலீஸார் விஜய தாஸ் பாலமுருகன் சூடாமணி உள்ளிட்டோர் திடீர் சோதனை நடத்தினர் அலுவலகத்தில் இருந்த கிராம ஊராட்சி செயலர்கள் மற்றும் பொதுமக்கள் முப்பதுக்கும் மேற்பட்டவர்கள் அலுவலகத்திற்கு உள்ளேயே வைத்து விசாரணை நடந்தது யாரும் வெளியே செல்ல முடியாத அளவிற்கு அலுவலகம் பூட்டப்பட்டது முதற்கட்ட தகவல் சின்னசேலம் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் வீராங்கன் மீது பல்வேறு முறைகேடு குற்றச்சாட்டு லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் சென்றதாகவும் அதுகுறித்து விசாரணையில் நடந்தது நேற்று முன்தினத்துடன் பணப் பரிவர்த்தனைகள் முடிந்து நேற்று முதல் ஊரக வளர்ச்சித் துறையில் பணமில்லா பரிவர்த்தனை அமலுக்கு வந்ததாக கூறப்படுகிறது அதனால் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் தகவல் அடிப்படையில் திடீர் சோதனை நடத்தினார்கள் சின்னசேலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் உள்ளே வந்ததை கண்டு அதிகாரிகள் கையிலிருந்த பணத்தை அலுவலக ஜன்னல் வழியாக பின்புறம் தூக்கி வீசியுள்ளனர் இதனை நேரில் பார்த்த லஞ்ச ஒழிப்பு போலீசார் அலுவலகம் பின்புறம் பகுதியில் செடி புதர்களில் 4 போலீசார் தேடுதல் பணியில் ஈடுபட்டனர் அப்போது 500 ரூபாய் கட்டு ஒன்று போலீசார் கைப்பற்றி உள்ளனர் மேலும் பணம் வீசப்பட்டு உள்ளதா என்பதனை தொடர்ந்து தேடுதல் பணியில் ஈடுபட்டு வந்தனர் தற்போது ஒரு லட்சத்து 44ஆயிரத்து 150 ரூபாய் கணக்கில் வராத பணம் கைப்பற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன 

சின்னசேலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற லஞ்ச ஒழிப்பு போலீசார்  சோதனையில் கணக்கில் வராத பணம் ஒரு லட்சத்து 44 ஆயிரத்து 150 ரூபாயை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைப்பற்றி பறிமுதல் செய்து எடுத்துச் சென்றனர் இதையடுத்து சோதனை நிறைவு பெற்றது யாரையும் கைது செய்யவில்லை இச்சம்பவத்தால் சின்னசேலத்தில் பரபரப்பு ஏற்பட்டது
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.