விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை - விருத்தாலசலம் தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்த தனியார் பேருந்து அதிகாலை நான்கு மணியளவில் திடீரெனப் பழுதாகி நின்றுக்கொண்டிருந்தது. இதனைத் தொடர்ந்து நின்று கொண்டிருந்த அந்த பேருந்தின் மீது சேலத்திலிருந்து சென்னை நோக்கி சென்ற ஆம்னி பேருந்து மோதிவிபத்துள்ளானது.
இந்த விபத்தில் பயணம் செய்துகொண்டிருந்த 20 பேர் காயமடைந்தனர். காயமடைந்த அனைவரும் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலிஸார், சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.