விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த இரண்டாம் தேதி வரை டெல்லி சென்று திரும்பியவர்கள், அவர்களது உறவினர்கள் என மொத்தம் 53 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனர்.
அதைத் தொடர்ந்து கோயம்பேடு காய்கறி சந்தை தொழிலாளர்கள் மூலம் அதிவேகமாக கரோனா தொற்று பரவிய நிலையில், கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கிடுகிடுவென உயர்ந்தது.
இந்நிலையில், கடந்த 23ஆம் தேதி நிலவரப்படி அம்மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 326ஆக இருந்தது. இவர்களில் 303 பேர் தற்போது வரை குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
இதற்கிடையே, விழுப்புரத்தில் கடந்த இரண்டு நாள்களாக புதிதாக யாருக்கும் கரோனா தொற்று ஏற்படவில்லை என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. இருப்பினும் கரோனா தொற்று அறிகுறிகளுடன் 17 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
இதையும் படிங்க : சிறப்பு ரயிலில் வந்த தொழிலாளர்கள் : நள்ளிரவில் வரவேற்ற ஆட்சியர்