ETV Bharat / state

புதிய கல்விக் கொள்கை மூலம் ஆர்எஸ்எஸ் கொள்கையை புகுத்த பாஜக முயற்சி - பொன்முடி குற்றச்சாட்டு - புதிய கல்விக் கொள்கை

விழுப்புரம்: ஆர்எஸ்எஸ் கொள்கைகளை புதிய கல்விக் கொள்கை மூலம் புகுத்த பாஜக முயற்சிப்பதாக திமுக முன்னாள் அமைச்சர் க.பொன்முடி குற்றஞ்சாட்டியுள்ளார்.

புதிய கல்விகொள்கை மூலம் ஆர்எஸ்எஸ் கொள்கையை புகுத்த முயற்சி! க.பொன்முடி குற்றச்சாட்டு

author img

By

Published : Aug 4, 2020, 1:42 PM IST

மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் இரண்டாம் ஆண்டு நினைவு தினம் வருகிற ஆகஸ்ட் 7ஆம் தேதி அக்கட்சியினரால் அனுசரிக்கப்பட உள்ளது. இதையடுத்து, விழுப்புரம் மாவட்டத்தில் மேற்கொள்ளவேண்டிய பணிகள் குறித்து அக்கட்சியின் முன்னாள் அமைச்சர் க.பொன்முடி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் இன்று (ஆகஸ்ட் 04) விழுப்புரம் கலைஞர் அறிவாலயத்தில் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் பேசிய பொன்முடி, " புதிய கல்விக் கொள்கையை எதிர்த்த அதிமுக அரசின் முடிவை வரவேற்கிறோம். இந்த விவகாரத்தில் ஆர்எஸ்எஸ் கொள்கையை புதிய கல்விக் கொள்கை மூலம் புகுத்த பாஜக முயற்சிக்கிறது. இந்த நாட்டை இந்து நாடாக மாற்ற நினைக்கிறது. புதிய கல்விக் கொள்கை மூலம் மாநில உரிமைகள் பறிக்கப்படுகின்றன. புதிய கல்விக் கொள்கையால் வளர்ச்சியோ, முன்னேற்றமோ இல்லை" என்றார்.

தகுந்த இடைவெளியுடன் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் திமுக மாவட்ட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்துகொண்டனர்.

இதையும் படிங்க: ஓபிசி இடஒதுக்கீடு: பிரதமர் மோடியிடம் கோரிக்கை வைத்த ஸ்டாலின்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.