ETV Bharat / state

பேரறிவாளனை விடுவிக்க ஆளுநர் ஒப்புதல் வழங்க வேண்டும் : எம்.பி., துரை. ரவிக்குமார்

விழுப்புரம் : நீதிமன்றத் தீர்ப்புக்கு முன்னரே பேரறிவாளனை விடுவிக்க ஆளுநர் ஒப்புதல் வழங்க வேண்டும் என எம்.பி., துரை. ரவிக்குமார் கோரிக்கை விடுத்துள்ளார்.

பேரறிவாளனை விடுவிக்க ஆளுநர் ஒப்புதல் வழங்க வேண்டும் என பேட்டி

author img

By

Published : Nov 7, 2020, 6:17 PM IST

விழுப்புரத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிறுநீரகக் கோளாறு தொடர்பான சிகிச்சைப் பெற பேரறிவாளன் இன்று (நவ.07) தனது தாயாருடன் வந்திருந்தார்.

இதையடுத்து மருத்துவமனையில் இருந்த பேரறிவாளன், தாயார் அற்புதம்மாளை எம்.பி.,துரை. ரவிக்குமார் சந்தித்து பேரறிவாளனின் உடல்நலம் குறித்து விசாரித்தார்.

பேரறிவாளனை விடுவிக்க ஆளுநர் ஒப்புதல் வழங்க வேண்டும் என பேட்டி

பின்னர் செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்ததாவது, "பேரறிவாளன் உடல்நிலை குறித்து, அவரது தாயார் அற்புதம்மாளிடம் கேட்டறிந்தேன். அவரின் 30 ஆண்டுகால கண்ணீருக்கு விடை கொடுக்க வேண்டும். நீதிமன்றத் தீர்ப்புக்கு முன்பே பேரறிவாளனை விடுவிக்க ஆளுநர் ஒப்புதல் வழங்க வேண்டும். இதற்கு அரசு ஒத்துழைக்க வேண்டும்" என்றார்.

இதையும் படிங்க : எழுவர் விடுதலை : ஆளுநருக்கு அரசு அழுத்தம் தர வேண்டும்! - ஜவாஹிருல்லா

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.