ETV Bharat / state

தாயால் தாக்கப்பட்ட குழந்தை - வீட்டிற்கு சென்று நலம் விசாரித்த அமைச்சர்

பெற்ற குழந்தையை தாயே தாக்கிய சம்பவம் குறித்து அறிந்த அமைச்சர் செஞ்சி மஸ்தான், பாதிக்கப்பட்டவர் வீட்டிற்கு சென்று நலம் விசாரித்தார்.

gingee mathan  minister gingee masthan  child attacked by his mother  moter attacked child  gingee mother attacked child  kallakurichi news  kallakurichi latest news  minister visit to see child attacked by his mother  தாயால் தாக்கப்பட்ட குழந்தை  குழந்தையை தாக்கிய தாய்  பாதிக்கப்பட்ட குழந்தையை நேரில் சென்று பார்த்த அமைச்சர்
செஞ்சி மஸ்தான்
author img

By

Published : Aug 31, 2021, 3:49 PM IST

Updated : Aug 31, 2021, 5:11 PM IST

விழுப்புரம்: செஞ்சி அருகே மணலப்பாடி மோட்டூர் கிராமத்தைச் சேர்ந்தவர் வடிவழகன். இவருக்கும், ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த துளசி என்பவருக்கும் 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் முடிந்து இரண்டு மகன்கள் இருக்கின்றனர்.

இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டதால், கணவன் வீட்டில் இல்லாத நேரத்தில் தனது இளைய மகன் பிரதீப்பை அடிக்கடி கடுமையாக தாக்கி அதை வீடியோவாகப் பதிவு செய்துள்ளார். இந்த வீடியோவைக் கண்டு அதிர்ச்சியடைந்த வடிவழகன், துளசி மீது சத்தியமங்கலம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

பாதிக்கப்பட்ட குழந்தையை நேரில் சென்று பார்த்த அமைச்சர்...

புகாரையடுத்த துளசி மீது மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து, செஞ்சி அனைத்து மகளிர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் ராஜகுமாரி தலைமையிலான தனிப்படையினர், துளசியை கைது செய்து, சிறையில் அடைத்துள்ளனர்.

நேரில் சந்தித்து ஆறுதல்

இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர்கள் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான், வடிவழகன் வீட்டிற்கு சென்று நலம் விசாரித்தார். பின்னர் அவர்களுக்கு ஆறுதல் தெரிவித்து, குழந்தையின் தந்தையிடம் 10,000 ரூபாய் நிதி வழங்கினார்.

இதையும் படிங்க: குழந்தையை கொடூரமாகத் தாக்கிய தாய்க்கு மனநல பாதிப்பு இல்லை

Last Updated : Aug 31, 2021, 5:11 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.