ETV Bharat / state

"முதலமைச்சர் செயல்படுத்தும் கல்வி திட்டங்களை நல்ல முறையில் பயன்படுத்தி உயர வேண்டும்" -அமைச்சர் பொன்முடி! - கல்விக்கடன் சிறப்பு முகாம்

Minister Ponmudi advised students: விழுப்புரம் மாவட்டத்தில் நடைபெற்ற மாபெரும் கல்விக் கடன் சிறப்பு முகாமில் பங்கேற்ற உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி, முதலமைச்சர் செயல்படுத்தும் அனைத்து திட்டங்களையும் நல்ல முறையில் பயன்படுத்தி நன்கு கல்வி கற்று உயர்ந்த நிலைக்கு செல்ல வேண்டும் என மாணவ, மாணவிகளுக்கு அறிவுரை வழங்கினார்.

மாணவர்களுக்கு அமைச்சர் பொன்முடி அட்வைஸ்
முதலமைச்சர் செயல்படுத்தும் கல்வி திட்டங்களை நல்ல முறையில் பயன்படுத்தி உயர வேண்டும்
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 23, 2023, 10:12 PM IST

முதலமைச்சர் செயல்படுத்தும் கல்வி திட்டங்களை நல்ல முறையில் பயன்படுத்தி உயர வேண்டும்

விழுப்புரம்: மாணவர்களுக்கு படிக்கும் எண்ணம் இருந்தால் மட்டும் போதும், பண உதவி தேவையை கருத்தில் கொண்டு கல்வி கடன் பெறலாம் என இன்று விழுப்புரம் மாவட்டத்தில் நடைபெற்ற மாபெரும் கல்விக்கடன் சிறப்பு முகாமில் உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி கூறியுள்ளார்.

பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள மருத்துவம், பொறியியல், சட்டம், செவிலியர், மருந்தாளுநர் போன்ற பல்வேறு உயர்கல்வி பயிலும் மாணவர்களின் கல்விச் செலவிற்காக, மாவட்டந்தோறும் வங்கிகள் வாயிலாக மாபெரும் கல்விக் கடன் முகாமை நடத்திட வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார்.

அதன்படி விழுப்புரம் மாவட்டத்தில் இன்று (நவ.23), மாபெரும் கல்விக்கடன் சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது. இந்த முகாம் மூலமாக கல்வி கடன் வழங்க விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து வங்கிகளும் வந்துள்ளனர். கல்லூரிகளில் இருந்து பெறப்பட்ட உரிய ஆவணங்கள் மற்றும் சான்றிதழ்களை கொண்டு விண்ணப்பித்து ரூ.4 இலட்சம் மற்றும் அதற்கு மேலாகவும் கல்விக் கடன் பெற்று பயனடையலாம்.

மேலும் இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி பேசுகையில், "முதல் தலைமுறை மாணவர்களை கண்டறிந்து அவர்களுக்கு உதவித்தொகை வழங்கியவர் முன்னாள் முதல்வர் கலைஞர். தற்போது, நம் தமிழ்நாடு முதலமைச்சர், தமிழ்நாடு அனைத்து துறைகளிலும் முன்னேற்றம் காண வேண்டும் என்றால் அனைவரும் கட்டாயம் அடிப்படைக் கல்வி மற்றும் உயர்கல்வி பயில வேண்டும் என்பதை நன்கறிந்துள்ளார்.

இதனால், பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள மாணவர்கள் உயர்கல்வி பயில வேண்டும் என்ற நோக்கத்தில் கல்வித்துறையில் பல்வேறு சிறப்புத் திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்தி, அதிகப்படியான கிராமப்புற மாணவ, மாணவியர்கள் உயர்கல்வி பயில்வதற்கு வழிவகை ஏற்படுத்திக் கொடுத்துள்ளார்.

ஒரு காலத்தில் குறிப்பிட்ட ஒரு வகுப்பினர்தான் படிக்க வேண்டும் என்பதை மாற்றி மாணவர்கள் முன்னேற பல திட்டங்களை உருவாக்கியது தமிழக அரசு. மாநிலத்தில் கல்வி வளர்ச்சிக்கென்று தனியாக குழு அமைத்து ஆய்வு மேற்கொண்டு வருகிறார் தமிழக முதல்வர்.

கல்வி வளர்ச்சியில் தமிழக முதல்வர் எடுக்கும் முயற்சியை அனைவரும் அறிவார்கள். அந்த வகையில், கிராமப்புற மாணவியர்கள் உயர் கல்வி பயில வேண்டும் என்ற நோக்கில் புதுமைப்பெண் திட்டத்தின் கீழ், மாதந்தோறும் ரூ.1000 உதவித்தொகை வழங்கப்படுகிறது.

கிராமப்புற மாணவர்கள் உயர்கல்வி பயில 7.5 சதவீத இட ஒதுக்கீடு, நான் முதல்வன் திட்டத்தின் கீழ் திறன் மேம்பாட்டு பயிற்சி போன்ற திட்டங்களால் தமிழ்நாட்டில் உயர்கல்வி பயிலும் மாணவ, மாணவியர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

இதையும் படிங்க: "தமிழகத்தில் அதிமுக எதிர்கட்சி இல்லை, ஆளுநர் எதிர்கட்சியாக செயல்படுகிறார்" - காதர் மொகிதீன்!

முதலமைச்சர், பொருளாதாரத்தில் பின்தங்கிய மருத்துவம், பொறியியல், சட்டம், செவிலியர், மருந்தாளுநர் போன்ற பல்வேறு உயர்கல்வி பயிலும் மாணவர்களின் கல்விச் செலவிற்காக, மாவட்டந்தோறும் வங்கிகள் வாயிலாக மாபெரும் கல்விக் கடன் முகாம் நடத்திட வேண்டும் என உத்தரவிட்டிருந்தார். அதனடிப்படையில், விழுப்புரம் மாவட்டத்தில், இன்றைய தினம், மாபெரும் கல்விக்கடன் சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது. இன்றைய தினம் நடைபெறும் மாபெரும் கல்விக்கடன் சிறப்பு முகாமில், விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து வங்கிகளும் முகாமிட்டுள்ளனர்.

எனவே, மாணவ, மாணவியர்கள் தாங்கள் பயின்ற கல்லூரியிலிருந்து பெறப்பட்ட உரிய ஆவணங்கள் மற்றும் சான்றிதழ்களுடன் விண்ணப்பித்து ரூ.4 இலட்சம் மற்றும் அதற்கு மேலாகவும் கல்விக் கடன் பெற்று பயனடையலாம். நீங்கள் வங்கிகளுக்கு நேரிடையாக சென்று விண்ணப்பித்தால், ஏற்படும் கால இழப்பினை ஈடு செய்திடும் விதமாக இந்த கல்விக் கடன் முகாம் நடைபெற்று வருகிறது. எனவே, கல்விக் கடன் வேண்டுவோர் தவறாமல் விண்ணப்பித்து பயன் பெற வேண்டும்.

2023 ஆம் ஆண்டு வரையில் 438 438 பேருக்கு கல்விக்கடன் உதவித் தொகை வழங்கப்பட்டுள்ளது. மேலும் இன்றைய தினம் 670 மாணவர்களுக்கு கடன் உதவி தொகை வழங்கப்பட உள்ளது. அதன் முன்னேற்பாடாக இன்றைய நிகழ்வில் 70 பேருக்கு நேரடியாகவும், 600 பேருக்கு தொகை விரைவில் கிடைக்கும் வகையில் மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுப்பார்.

இதில், மருத்துவம், பொறியியல் பயிலும் 5 மாணவ, மாணவியர்களுக்கு ரூ.1.19 கோடி மதிப்பிலான கல்வி கடன் உதவி வழங்கப்பட்டுள்ளது. முதலமைச்சர், செயல்படுத்தும் அனைத்து திட்டங்களையும் நல்ல முறையில், பயன்படுத்தி நன்கு கல்வி கற்று உயர்ந்த நிலைக்கு செல்வதோடு, மற்றவர்களுக்கு வேலை வாய்ப்பை வழங்கும் அளவிற்கு தங்கள் திறனை மேம்படுத்திக்கொள்ள வேண்டும்.

பாடகி சுசிலா அவர்களுக்கு முதல்வர் டாக்டர் பட்டம் வழங்கியுள்ளார்கள். கல்லூரியில், முதல்வர் ஸ்டாலின் வேந்தராக இருப்பதனால் அவருக்கு டாக்டர் பட்டம் வழங்கப்பட்டிருக்கிறது" என கூறியுள்ளார். இவ்விழாவில் சட்டமன்ற உறுப்பினர்கள் லட்சுமணன், புகழேந்தி, சிவக்குமார், மாவட்ட ஆட்சியர் பழனி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க: பிரதமர் மோடி எங்கு சென்றாலும் என்னைப் பற்றியே பேசுகிறார்.. உதயநிதி ஸ்டாலின் கூறியது என்ன?

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.