விழுப்புரம்: ஜெர்மனியில் வாழும் தமிழ் பெண் ஜோஸ்பின் ரம்யா. இவர் சமூக வலைத்தளமான ட்விட்டரில் அமைச்சர் கே. எஸ். மஸ்தானை டேக் செய்து உதவி கேட்டுள்ளார்.
அந்த பதிவில், "எனது தோழியின் சகோதரி அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியாவில் இறந்து விட்டதால், அவரின் பெற்றோர் இந்தியாவில் இருந்து அவசரமாக அமெரிக்காவிற்குச் செல்ல வேண்டும். அதற்கு உதவி செய்யுங்கள்" எனக் குறிப்பிட்டு கோரிக்கை விடுத்திருந்தார்.
உடனடியாக அமைச்சர் கே.எஸ். மஸ்தான் அவர்களின் விபரங்களை பெற்று இந்திய தூதரகத்திற்கு அனுப்பி அமெரிக்கா செல்வதற்கான அவசர பயண அனுமதி பெற்றுக் கொடுத்தார்.
இதையடுத்து அந்த பெண், அமைச்சர் கே.எஸ். மஸ்தானுக்கு நன்றி தெரிவித்து ட்வீட் செய்துள்ளார்.
இதையும் படிங்க: 'வெளிநாடு வாழ் தமிழர்களுக்கு திமுக அரசு எப்போதும் உறுதுணையாக இருக்கும்' - அமைச்சர் மஸ்தான்