விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த ஓமந்தூர் பகுதியில் அமைந்துள்ள ஓமந்தூரார் நினைவு மண்டபத்தில் இன்று சென்னை மாகாண முன்னாள் முதலமைச்சர் 126ஆவது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் சட்டத் துறை அமைச்சர் சி.வி. சண்முகம் ஓமந்தூராரின் உருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
எம்எல்ஏக்கள் சக்கரபாணி, முத்தமிழ்ச் செல்வன், மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை, கூடுதல் ஆட்சியர் ஸ்ரேயா பி. சிங், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராதாகிருஷ்ணன், திண்டிவனம் சார் ஆட்சியர் அனு ஆகியோர் உடனிருந்தனர்.
மேலும் ஓமந்தூரார் நலச்சங்கம் சார்பில் நூற்றுக்கும் மேற்பட்ட நிர்வாகிகள் இந்தப் பிறந்தநாள் விழாவில் பங்கேற்றனர்.