ETV Bharat / state

‘என் காரை மறித்து கேள்வி கேட்கலாம்!’ - மூதாட்டிக்கு அமைச்சர் உத்திரவாதம்! - Villupuram

விழுப்புரம்: விக்கிரவாண்டி ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதிகளில் ரூ.60 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளுக்கு அமைச்சர் சி.வி.சண்முகம் இன்று அடிக்கல் நாட்டினார்.

cv shanmugan
author img

By

Published : Aug 16, 2019, 8:31 PM IST

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி ஒன்றியத்துக்கு உட்பட்ட விக்கிரவாண்டி, வி.சாலை, ரெட்டிகுப்பம், அய்யூர் அகரம் உள்ளிட்ட 33 ஊராட்சி பகுதிகளில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான குடிநீர், மின்விளக்கு, சாலை, வடிகால் வசதி உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு அமைச்சர் சி.வி.சண்முகம் இன்று அடிக்கல் நாட்டினார்.

பின்னர் வி. சாலை பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர், 'அதிமுக ஆட்சியில் மக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் அனைத்தும் சிறப்பான முறையில் நிறைவேற்றப்பட்டு வருகிறது. இந்தாண்டு விழுப்புரம் மாவட்டத்தில் போதுமான அளவு மழை இல்லை. இருப்பினும் வறட்சி நிலவரங்களை மாவட்ட ஆட்சியர் நேரில் சென்று கண்டறிந்து குடிநீர் பிரச்னை ஏற்படாதவாறு சிறப்பான முறையில் பணியாற்றினார்' என்றார்.

இதற்கிடையே வி.சாலை பகுதியில் நடைபெறவுள்ள பணிகளுக்கு அடிக்கல் நாட்டிய அமைச்சரிடம் மூதாட்டி ஒருவர் தனது வீட்டுக்கு கழிவறை வசதி வேண்டுமென முறையிட்டார்.

விக்கிரவாண்டி ஒன்றியத்தில் பகுதிகளில் அடிக்கல் நாட்டிய அமைச்சர்
இதையடுத்து அதே இடத்தில் சம்பந்தப்பட்ட அலுவலர்கள், ஊராட்சி செயலாளரை நேரில் அழைத்து, அந்த மூதாட்டியின் வீட்டுக்கு உடனடியாக கழிவறை கட்டிகொடுக்குமாறும், மேலும், இதற்கான பணிகளை நாளையே தொடங்க வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பித்தார். பின்னர், அலுவலர்கள் உங்களுக்கு கழிவறை கட்டித் தராவிட்டால், தான் இந்த வழியாக செல்லும்போது தனது காரை மறித்து நீங்கள் கேள்வி கேட்கலாம் என்றும் அந்த மூதாட்டியிடம் அமைச்சர் உத்திரவாதம் அளித்தார். இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் சுப்பிரமணியன், காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார், மாவட்ட ஊரக வளர்ச்சி திட்ட இயக்குநர் மகேந்திரன், அதிமுக மாவட்ட நிர்வாகிகள், தொண்டர்கள் என திரளானோர் கலந்துகொண்டனர்.

Intro:விழுப்புரம்: விக்கிரவாண்டி ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதிகளில் ரூ.60 லட்சம் மதிப்பிலான அடிப்படை வசதிகளுக்கு அமைச்சர் சி.வி.சண்முகம் இன்று அடிக்கல் நாட்டினார்.

Body:விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி ஒன்றியத்துக்கு உட்பட்ட விக்கிரவாண்டி, வி.சாலை, ரெட்டிகுப்பம், அய்யூர் அகரம் உள்ளிட்ட 33 ஊராட்சி பகுதிகளில் பல லட்சம் மதிப்பிலான குடிநீர், மின்விளக்கு, சாலை மற்றும் வடிகால் வசதி உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு அமைச்சர் சி.வி.சண்முகம் இன்று அடிக்கல் நாட்டினார்.

பின்னர் வி. சாலை பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர்., "அதிமுக ஆட்சியில் மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் அனைத்தும் சிறப்பான முறையில் நிறைவேற்றப்பட்டு வருகிறது.

இந்தாண்டு விழுப்புரம் மாவட்டத்தில் போதுமான அளவில் மழை இல்லை. இருப்பினும் வறட்சி நிலவரங்களை மாவட்ட ஆட்சியர் நேரில் சென்று கண்டறிந்து குடிநீர் பிரச்னை ஏற்படாதவாறு சிறப்பான முறையில் பணியாற்றினார்" என்றார்.

இதற்கிடையே வி.சாலை பகுதியில் நடைபெறவுள்ள பணிகளுக்கு அடிக்கல் நாட்டிய அமைச்சரிடம் மூதாட்டி ஒருவர் தனது வீட்டுக்கு கழிவறை வசதி வேண்டுமென முறையிட்டார்.

இதையடுத்து அதே இடத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் ஊராட்சி செயலாளரை நேரில் அழைத்த அமைச்சர் சி.வி.சண்முகம், அந்த மூதாட்டியின் வீட்டுக்கு உடனடியாக கழிவறை கட்டிகொடுக்குமாறு உத்தரவிட்டார். மேலும், இதற்கான பணிகளை நாளையே துவங்க வேண்டும் எனவும் அவர் உத்தரவு பிறபித்தார்.

பின்னர், அதிகாரிகள் உங்களுக்கு கழிவறை கட்டி தராவிட்டால், நான் இந்த வழியாக செல்லும்போது என காரை மறித்து நீங்கள் கேள்வி கேட்கலாம் என்றும் அந்த மூதாட்டியிடம் அமைச்சர் கூறினார்.

பொதுமக்களின் குறையை உடனடியாக நீக்க உத்தரவிட்ட அமைச்சர் சி.வி.சண்முகத்தை அங்கிருந்தவர்கள் பாராட்டினர்.

Conclusion:இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் சுப்பிரமணியன், காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார், மாவட்ட ஊரக வளர்ச்சி திட்ட இயக்குநர் மகேந்திரன் மற்றும் அதிமுக மாவட்ட நிர்வாகிகள், தொண்டர்கள் என திரளானோர் கலந்து கொண்டனர்.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.