ETV Bharat / state

ஸ்டாலினை முதலமைச்சராக்க கருணாநிதிக்கு விருப்பமில்லை: அமைச்சர் சி.வி.சண்முகம்

விழுப்புரம்: மு.க.ஸ்டாலினை முதலமைச்சராக்க கருணாநிதிக்கு விருப்பமில்லை என தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் கூறியுள்ளார்.

mugam
author img

By

Published : Mar 24, 2019, 11:55 AM IST

விழுப்புரம் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் பாமக வேட்பாளர் வடிவேல் ராவணனை அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய அமைச்சர் சி.வி.சண்முகம், “அதிமுக பல தேர்தல்களை சந்தித்துள்ளது. ஆனால், ஜெயலலிதா மறைவுக்கு பிறகு நடைபெறுகிற முதல் தேர்தல் இதுவாகும். அதனால் இந்தத் தேர்தல் முக்கியத்துவம் பெற்றுள்ளது. பல்வேறு சூழ்ச்சிகளுக்கு மத்தியில் ஜெயலலிதாவின் ஆசியோடு இந்த ஆட்சி சிறப்பாக நடைபெற்றுவருகிறது.

இந்தக் கூட்டணி வெற்றி கூட்டணி. திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை முதலமைச்சராக்க கருணாநிதிக்கு விருப்பமில்லை. அவர் நினைத்திருந்தால் ஸ்டாலினை திமுக தலைவராகவும், முதலமைச்சராகவும் ஆக்கியிருக்க முடியும். ஆனால் அவர் அதற்கெல்லாம் சரிபட்டு வரமாட்டார். ஸ்டாலினின் முதலமைச்சர் கனவுக்கு சமாதிகட்ட வேண்டும். விழுப்புரம் மக்களவைத் தொகுதியில் யார் வெற்றிபெற வேண்டும் என்பதைவிட, யார் வென்றுவிடக்கூடாது என்பதில் நாம் கவனமாக இருக்க வேண்டும்” என்றார்.

Intro:விழுப்புரம்: மு.க.ஸ்டாலினை முதல்வராக்க, மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு விருப்பமில்லை என்று தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் கூறினார்.

Body:விழுப்புரம் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் பாமக வேட்பாளர் வடிவேல் ராவணனை அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சி விழுப்புரத்தில் இன்று நடைபெற்றது.

நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய அமைச்சர் சி.வி.சண்முகம்., 'அதிமுக பல தேர்தல்களை சந்தித்துள்ளது. ஆனால், ஜெயலலிதா மறைவுக்கு பிறகு நடைபெறுகிற முதல் தேர்தல் இதுவாகும். அதனால் இந்த தேர்தல் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

பல்வேறு சூழ்ச்சிகளுக்கு மத்தியில் ஜெயலலிதாவின் ஆசியோடு இந்த ஆட்சி சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த கூட்டணி வெற்றி கூட்டணி.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை முதல்வராக்க, மறைந்த கருணாநிதிக்கு விருப்பமில்லை. அவர் நினைத்திருந்தால் ஸ்டாலினை திமுக தலைவராகவும், முதல்வராகவும் ஆக்கியிருக்க முடியும். ஆனால் அவர் அதற்கெல்லாம் சரிபட்டு வரமாட்டார். ஸ்டாலினின் முதல்வர் கனவுக்கு சமாதி கட்ட வேண்டும்.

விழுப்புரம் மக்களவைத் தொகுதியில் யார் வெற்றிபெற வேண்டும் என்பதை விட, யார் வென்று விடக்கூடாது என்பதில் நாம் கவனமாக இருக்க வேண்டும். அதிமுக மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளும், தொண்டர்களும் களப்பணியை விரைவுப்படுத்த வேண்டும்' என்றார்.

தொடர்ந்து பேசிய தேமுதிக மாவட்ட செயலாளர் எல்.வெங்கடேசன்., 'திமுக என்ற தீய சக்தி இந்த தேர்தலுடன் இருக்கும் இடம் தெரியாமல் போய்விடும். மக்கள் நலக் கூட்டணியில் இடம்பெற்ற கட்சிகள் திமுகவில் இணைந்தில் எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சி.

தொலைக்காட்சி கருத்து கணிப்புகள் அனைத்தும் பொய்யானது' என்றார்.

Conclusion:இந்த கூட்டத்தில் அதிமுக எம்.பி.லட்சுமணன், தேமுதிக மாவட்ட செயலாளர் எல்.வெங்கடேசன், பாஜக மாவட்ட தலைவர் சுகுமார் உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.