விழுப்புரம் மாவட்டத்திற்கு சட்டத் துறை அமைச்சர் சி.வி. சண்முகம் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்வதற்காக வந்துள்ளார்.
அப்போது செய்தியாளர்களிடம் அவர், "என்னுடைய ஆதரவு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துக்கும், அதன் தலைமையில் இயங்கும் முதலமைச்சருக்கும் துணை முதலமைச்சருக்கும் இவர்கள் இருவரும் ஒற்றுமையாக இருந்துவருகிற தேர்தலைச் சந்திப்பார்கள்.
பச்சைத்துண்டு அணிந்தவர்கள் எல்லாம் விவசாயி ஆகிவிட முடியுமா? விவசாயிகளின் நிலத்தை அபகரிக்கவே திமுகவினருக்குத் தெரியும். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்றுவரை தொடர்ந்து விவசாயம் செய்துவருகிறார்.
அதிமுகவினரை ஊழல் வழக்குகளிலிருந்து பாஜக காப்பாற்றுவதாக கூறும் ஸ்டாலின், தங்கள் குடும்பத்தினர் மீது சுமத்தப்பட்டுள்ள 2ஜி வழக்கு குறித்து என்ன பதில் தெரிவிப்பார்" என்றார்.
இதையும் படிங்க: அண்ணா பல்கலைக்கழகத்தை 2ஆக பிரிக்கும் முடிவில் மாற்றமில்லை - அமைச்சர் அன்பழகன்