கீழ் வெண்மணி தியாகிகள் நினைவு நாளை முன்னிட்டு நேற்று, கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை வட்டாட்சியர் அலுவலகம் அருகில் மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சியின் தொகுதி செயலாளர் கலியமூர்த்தி தலைமையில் மக்கள் கோரிக்கை மாநாடு நடைபெற்றது.
இந்த மாநாட்டில், அக்கட்சியின் மாவட்ட குழு உறுப்பினர் கொளஞ்சிநாதன் வரவேற்புரையாற்றியானர். இம்மாநாட்டில் சிறப்பு விருந்தினர்களாக அக்கட்சியின் மத்திய கமிட்டி உறுப்பினர் பாலசுந்தரம், புதுவை மாநிலச் செயலாளர் கோ. பாலசுப்ரமணியம் விழுப்புரம் மாவட்டச் செயலாளர் எம். வெங்கடேசன் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினர்.
இதில், குடியுரிமை திருத்தச் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும், கிராமம் மற்றும் நகர்புற ஏழைகள் வீட்டுமனை இல்லாதவர்களைக் கணக்கெடுத்து அவர்களுக்கு வீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பஞ்சமி நிலங்களை மீட்டு தலித்துகளிடம் ஒப்படைக்க தனிச் சட்டம் கொண்டு வர வேண்டும், முதியோர் உதவிதத்தொகையை 5000 ரூபாயாக உயர்த்திட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மேலும், ஜனவரி 8ஆம் தேதி நடைபெறவுள்ள நாடுதழுவிய பொது வேலை நிறுத்தத்திற்கு ஆதரவு தெரிவித்து அனைத்திந்திய விவசாய கிராமப்புற தொழிலாளர் சங்கம் சார்பாக ஊராட்சிகள் தோறும் அரசு அலுவலகங்கள் முன்பு மறியல் போராட்டம் நடத்துவது என்று மாநாட்டில் முடிவு செய்துள்ளனர்.
இதையும் படிங்க: குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக இஸ்லாமியர்கள் ஆர்ப்பாட்டம்!