ETV Bharat / state

Fact Check: மரக்காணத்தில் கடல் நீரை உறிஞ்சியதா மேகம்? உண்மையில் நடந்தது என்ன? - Etv bharat tamil news

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் பகுதியில் மேகம் கடல் நீரை உறிஞ்சுவது போல் மீனவர்கள் எடுத்ததாக கூறி சில ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ள நிலையில், அந்த வீடியோ குறித்து ஆய்வு செய்ததில் அது 2013-ம் ஆண்டு அமெரிக்காவில் எடுக்கப்பட்டது என தெரியவந்துள்ளது.

Fact Check
Fact Check
author img

By

Published : Dec 27, 2022, 8:11 PM IST

Updated : Dec 28, 2022, 11:02 AM IST

விழுப்புரம்: மரக்காணம் மீனவர்கள் கடலில் தங்கி மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது மீனவர்கள் தங்களது செல்போனில் மேகங்கள் கடல் நீரை உறிஞ்சும் அரிய காட்சியைப் படம் பிடித்து வெளியிட்டுள்ளதாகத் தமிழ் முன்னணி செய்தி நிறுவனங்கள் சில செய்தி வெளியிட்டன.

அந்த வீடியோவின் உண்மைத் தன்மை குறித்து ஈடிவி பாரத் தமிழ்நாடு குழு(Fact Check) ஆய்வு செய்தது. ரிவர்ஸ் இமேஜ் சர்ச்சின் போது இந்த புகைப்படம் மற்றும் வீடியோ மரக்காணத்தில் எடுக்கப்பட்டது அல்ல என்பதும் அது பழைய வீடியோ மற்றும் புகைப்படம் என்பதும் தெரியவந்துள்ளது.

மேகங்கள் நீரை உறிஞ்சுவது போன்ற இந்த நிகழ்வை வானிலை ஆய்வாளர்கள் சுழல் காற்று என்றும் ஆங்கிலத்தில் டோர்னடோ(Tornado) என்று அழைக்கின்றனர். குறிப்பிடப்பட்டுள்ள இந்த சம்பவம் தொடர்பாக அடிக்கடி போலி செய்திகளும் பரவிய வண்ணம் உள்ளது. 2017 மற்றும் 2019-ம் ஆண்டு இதேபோன்று வீடியோ பரவியது.

ஆனால், இந்த சம்பவம் 2013-ம் ஆண்டு நடந்துள்ளதை தனியார் வானிலை ஆய்வாளர் ஜெஸ்ஸி ஃபெரெல்(Jesse Ferrell) என்பவர் உறுதி செய்துள்ளார். அந்த புகைப்படம் மற்றும் வீடியோ அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் எடுக்கப்பட்டதையும், ஜோயி மோல்(Joey Mole) என்பவர் 2013 ஜூலை மாதம் எடுத்துள்ளதையும் அவர் உறுதி செய்துள்ளார். அதன் முழு விபரங்கள் கீழே உள்ள இணைப்பில் கொடுக்கப்பட்டுள்ளது.

லிங்க் - https://www.accuweather.com/en/weather-blogs/weathermatrix/vetting-florida-waterspout-pic-toronto-storm-photo/34838

இந்த சம்பவத்தை தான் முன்னணி ஊடகங்கள் சில தற்போது மரக்காணத்தில் நடந்ததாக செய்தி வெளியிட்டுள்ளன.

இதையும் படிங்க: TNPSC: குரூப்-4 தேர்வில் கூடுதலாக 2450 பணியிடங்கள்.. ஜனவரியில் தேர்வு முடிவு!

Last Updated : Dec 28, 2022, 11:02 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.