ETV Bharat / state

வெகு விமரிசையாக நடைபெற்ற மயிலம் பங்குனி உத்திரத்தேரோட்டம்; அமைச்சர் மஸ்தான் பங்கேற்பு - விழுப்புரம் மாவட்ட செய்தி

விழுப்புரம் மாவட்டத்தில் வெகு விமரிசையாக நடைபெற்ற மயிலம் முருகன் கோயில் பங்குனி உத்திரத்தேர் திருவிழாவில் அமைச்சர் செஞ்சி மஸ்தான் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்தார்.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Apr 4, 2023, 2:53 PM IST

வெகு விமர்சையாக நடைபெற்ற மயிலம் பங்குனி உத்திர தேரோட்டம்; அமைச்சர் மஸ்தான் பங்கேற்பு

விழுப்புரம்: திண்டிவனம் அடுத்த மயிலத்தில் பழமைவாய்ந்த வள்ளி, தெய்வானை, சுப்பரமணியர் சுவாமி கோயிலில் கடந்த 27ஆம் தேதி கொடியேற்றத்துடன் பங்குனி உத்திரத் திருவிழா துவங்கியது. தொடர்ந்து நாள்தோறும் பூஜைகள் செய்யப்பட்டு, உற்சவர் தங்க மயில் வாகனம், யானை, குதிரை, நாக வாகனம் போன்றவற்றில் கிரிவல காட்சி நடந்தது.

நேற்று இரவு முருகன் - வள்ளி, தெய்வானை திருக்கல்யாணம் நடைபெற்றது. இன்று தேரோட்டத்தை முன்னிட்டு அலங்கரிக்கப்பட்ட திருத்தேரை தமிழ்நாடு சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் மற்றும் மயிலம் பொம்மபுர ஆதீனம் 20ஆம் பட்டம் சிவஞான பாலய சுவாமிகள் வடம்பிடித்து இழுத்து துவக்கி வைத்தனர்.

தொடர்ந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் அரோகரா கோஷம் விண்ணை முட்ட, வடம் பிடித்து தேரை இழுத்துச் சென்றனர். முதலில் விநாயகர் தேரும், தொடர்ந்து வள்ளி, தெய்வானை, சமேத சுப்பரமணியர் சுவாமியும், தேரில் வீதியில் வலம் வந்தனர். அப்போது தேர் இழுக்கக் கூடியிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் விவசாய நிலங்களில் விளைந்த மணிலா, கம்பு, மிளகாய், உளுந்து உள்ளிட்ட தானியங்கள் மற்றும் நாணயங்களை தேரடியில் வீசி தங்களது நேர்த்திக் கடனை செலுத்தி வழிபட்டனர். பின்னர் தேர் காலை 7.10 மணிக்கு நிலைக்கு வந்தடைந்தது. இதனைத் தொடர்ந்து உற்சவருக்கு மகா தீபாராதனை செய்தனர்.

பின்னர் மூலவருக்கு பால், தயிர், இளநீர், தேன், சந்தனம், பன்னீர் உள்ளிட்ட நறுமணப்பொருட்களினால் சிறப்பு அபிஷேகம் செய்து வழிபாடுகள் நடந்தன. தொடர்ந்து வள்ளி, தெய்வானையுடன் முருகப்பெருமான் தங்க கவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். தேர் திருவிழாவைக் காண தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த முருகப் பக்தர்கள், தீர்த்த குளத்தில் நீராடி முடி காணிக்கை செலுத்தி, பன்னீர், பால், புஷ்ப காவடிகள் எடுத்தனர்.

கோயில் மூன்றாம் பிரகாரத்தில் பெண்கள், குழந்தைகள் எனப் பலர் அங்கப்பிரதட்சணம் மேற்கொண்டனர். சென்னை, புதுவை, விழுப்புரம், கடலூர் உள்ளிட்டத் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை மயிலம் பொம்மபுர ஆதீனம் 20ஆம் பட்டம் சிவஞான பாலய சுவாமிகள் செய்திருந்தார்.

விழாவில் நாளை (புதன்கிழமை) இரவு தெப்பல் உற்சவமும், நாளை மறுநாள் இரவு முத்து பல்லக்கு உற்சவமும், 7ஆம் தேதி சண்டிகேஸ்வரர் உற்சவமும் நடக்க உள்ளது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் மயிலம் பொம்மபுர ஆதீனம் 20ஆம் பட்டம் ஸ்ரீமத் சிவஞானபாலய சுவாமிகள் மற்றும் கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

இதையும் படிங்க: விழுப்புரம் கொலை சம்பவம்; எதிர்கட்சியினர் தீர்மானத்திற்கு முதலமைச்சர் பதில்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.