ETV Bharat / state

விழுப்புரம் மாவட்டத்திலேயேதான் இருப்போம் - பொதுமக்கள் போர்க்கொடி!

விழுப்புரம்: திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள பகுதிகளை  விழுப்புரம் மாவட்டத்துடன் இணைக்க வேண்டியும், கள்ளக்குறிச்சி மாவட்டத்துடன் இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தும்  திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலை பேரங்கியூரில் போராட்டம் நடைபெற்றது.

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அனைத்துக்கட்சியினர்
author img

By

Published : Sep 18, 2019, 7:53 PM IST

Updated : Sep 19, 2019, 8:49 AM IST

விழுப்புரத்திலிருந்து 10 கி.மீ தொலைவிலுள்ள அரசூரை 70 கி.மீ தொலைவில் உள்ள கள்ளக்குறிச்சி மாவட்டத்தோடு இணைப்பதைக் கைவிட்டு, விழுப்புரம் மாவட்டத்திலேயே தொடரச் செய்ய வேண்டும், விழுப்புரத்திலிருந்து 16 கி.மீ தொலைவில் உள்ள திருவெண்ணெய்நல்லூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள மடப்பட்டு, பெரியசெவலை சித்தலிங்கமடம், திருநாவலூர், முகையூர் போன்ற பகுதிகளை உள்ளடக்கி திருவெண்ணெய் நல்லூரை தனி தாலுக்காவாக அறிவிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, பல்வேறு கட்சிகளின் சார்பில் சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கூடி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து போராட்டக்காரர்கள் சார்பில் கூறியதாவது, ”கடந்த 9 மாதங்களாக திருவெண்ணெய்நல்லூர், திருநாவலூர், முகையூர் ஆகிய பகுதிகளை விழுப்புரம் மாவட்டத்துடன் இணைக்க வேண்டி 5,000க்கும் மேற்பட்ட மனுக்களை விழுப்புரம் மாவட்ட ஆட்சியர், முதலமைச்சர் உள்ளிட்டோருக்கு அனுப்பியும் எந்தவித பதிலும் இல்லை.

இதைத்தொடர்ந்து மனிதச் சங்கிலி, கண்டன ஆர்ப்பாட்டம், கையெழுத்து இயக்கம், கருப்புக்கொடி போராட்டம் உள்ளிட்டவை நடத்தியும் பலனில்லை. இனிமேலாவது காலம் தாழ்த்தாமல் இந்தப் பகுதிகளை விழுப்புரம் மாவட்டத்துடன் இணைக்க முதலமைச்சரும், உளுந்தூர்பேட்டை சட்டப்பேரவை உறுப்பினரும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்படி நடவடிக்கை எடுக்காவிட்டால் விழுப்புரம் மாவட்டத்துடன் இணைக்கும்வரை தொடர் போராட்டம் நடைபெறும்” என்றனர்.

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அனைத்துக்கட்சியினர்

போராட்டத்திற்கு முன்னதாக ஏராளமான காவல் துறையினர் போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதையும் படிங்க: திருவெண்ணைநல்லூர் பேரூராட்சி - விழுப்புரம் மாவட்டத்துடன் இணைக்க கோரிக்கை

Intro:Body:

*திருவெண்ணெய் நல்லூர் அருகே உள்ள   பகுதிகளை  விழுப்புரம் மாவட்டத்துடன் இணைக்க வேண்டியும் கள்ளக்குறிச்சி உடன் இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தும்  திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலை பேரங்கியூரில் போராட்டம் நடைபெற்றது*

விழுப்புரம் அருகே உள்ள திருவெண்ணெய்நல்லூர் பகுதிகளை விழுப்புரம் மாவட்டதுடன் இணைக்க வேண்டும் .விழுப்புரத்திலிருந்து 30கிமீ தொலைவிலுள்ள  அரசூர், திருவெண்ணெய்நல்லூர், மடப்பட்டு பெரியசெவலை சித்தலிங்கமடம், திருநாவலூர் முகையூர்ஆகிய பகுதிகளை  விழுப்புரம் மாவட்டத் உடன் இணைக்க வேண்டும் .திருவெண்ணெய் நல்லூரை தாலுகாவாக அறிவிக்க வேண்டும். ஆகிய கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி விழுப்புரம் மாவட்ட இணைப்புக் குழு மற்றும் அனைத்து கட்சிகள் சார்பில் பேரங்கியூர் திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கண்டன போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு பாமக மாவட்ட இளைஞரணி பொறுப்பாளர் பிரவீன்குமார் தலைமை தாங்கினார். விழுப்புரம் இணைப்பு குழு ஒருங்கிணைப்பாளர் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நகர செயலாளர் முருகன், விடுதலை சிறுத்தைகள் கட்சியை மாவட்ட பொருளாளர் இளங்கோவன் தேமுதிக ஒன்றிய செயலாளர் ராமச்சந்திரன். அம்மா மக்கள் முன்னேற்ற கழக நகர செயலாளர் சோலையப்பன் , அனைத்திந்திய இளைஞர் பெருமன்ற மாவட்ட செயலாளர் மணிகண்டன் ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள். கூட்டத்தில் இந்தப் பகுதி மக்கள் கடந்த 9 மாதங்களாக திருவெண்ணெய்நல்லூர் திருநாவலூர் முகையூர் ஆகிய பகுதிகளை விழுப்புரம் மாவட்டத்துடன் இணைக்க வேண்டி  விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற கருத்துக்கேட்பு கூட்டத்தில் ஐயாயிரத்துக்கும் மேற்பட்ட மனுக்கள் வழங்கியும் முதலமைச்சர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு 5000 தபால் அட்டைகள் அனுப்பியும்   தொடர்ந்து மனித சங்கிலி கையெழுத்து இயக்கம் கண்டன ஆர்ப்பாட்டம் கருப்புக்கொடி போராட்டம்  பல்வேறு விதமான போராட்டங்களையும் நடத்தி வருகின்றனர். இந்தப் பகுதி மக்களின் நலன் கருதி விழுப்புரம் மாவட்டத்துடன் இந்த பகுதிகளை இணைக்க தமிழக முதலமைச்சரும் உளுந்தூர்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் குமரகுரு அவர்களும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் விழுப்புரம் மாவட்டத்துடன் இணைக்கும் வரை தொடர் போராட்டம் நடைபெறும் என்றும் போராட்டத்தில் கண்டன உரையாற்றினார்கள்

போராட்டத்திற்கு முன்னதாக விழுப்புரம் கூடுதல் காவல்துறை கண்காணிப்பாளர் சரவணகுமார். உளுந்தூர்பேட்டை போலீஸ் துணை சூப்பிரண்டு பாலச்சந்தர் இன்ஸ்பெக்டர்கள் ஜெயலட்சுமி. விஜி. எழிலரசி, பத்மா,அபன்ராஜ், ராஜ், மகேஸ்வரி,  சப்-இன்ஸ்பெக்டர் செல்வநாயகம் ஐயனார் அகிலன் உள்பட 500க்கும் மேற்பட்ட போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தினர்.  அசம்பாவிதம் ஏற்படாத வகையில் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு போலீசார் குவிக்கப்பட்டு இருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது .இந்த ஆர்ப்பாட்டத்தில்அம்மா மக்கள் முன்னேற்ற கழக மாவட்ட பொறுப்பாளர் கலியபெருமாள்,  இந்து முன்னணி மாவட்ட செயலாளர் சதீஷ்,  விடுதலை சிறுத்தைகள் கட்சி ஒன்றிய செயலாளர்கள் வடிவேல்,  இளவரசு தேமுதிக நகர செயலாளர் அச்சு முருகன் , பகுஜன் சமாஜ் கட்சி மாவட்ட அமைப்பாளர் சத்தியமூர்த்தி, தேமுதிக ஒன்றிய பொருளாளர் செந்தில், மக்கள் அதிகாரம் நிர்வாகியை பழனி, விழுப்புரம் இணைப்பு குழு நிர்வாகி அருள் புத்தர் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். முடிவில் இணைப்புக் குழுவை சேர்ந்த  சிவா நன்றி கூறினார்...

[9/18, 6:24 PM] +91 86088 30111: இன்றைய போராட்டம்..

[9/18, 6:24 PM] +91 86088 30111: நாளைய கடை அடைப்பு

Conclusion:
Last Updated : Sep 19, 2019, 8:49 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.