இதுதொடர்பாக விழுப்புரத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர், குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் நடைபெற்றுவரும் போராட்டம் தேசவிரோத போராட்டமாக, பாகிஸ்தான் நிலைபாட்டை ஆதரிக்கும் போராட்டமாக மாறிக்கொண்டிருக்கிறது. என்பிஆர், என்ஆர்சி, சிஏஏ போன்ற திட்டங்களால் இந்தியாவில் உள்ள இஸ்லாமியர்கள் உள்ளிட்ட யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை.
இதுகுறித்து பிரதமர், உள்துறை அமைச்சர் மற்றும் தமிழ்நாடு முதலமைச்சர் ஆகியோர் விளக்கிய பின்பும் போராட்டங்கள் தொடர்ந்து கொண்டிருக்கிறது. போராட்ட நேரத்தில் பாகிஸ்தான் ஜிந்தாபாத் என்ற குரல்கள் ஒலிக்கத் துவங்கியுள்ளன.
மேற்கு வங்க முதலமைச்சர் வங்கதேசத்திலிருந்து வருகிற அனைவருக்கும் குடியுரிமை வழங்கப்படும் என தெரிவித்துள்ளார். இந்த செயல்கள் எல்லாம் அந்நிய நாட்டை ஆதரிக்கும் விதமாக உள்ளது.
திமுகவின் செயல்பாடுகள் தொடர்ச்சியாக முகமது அலி ஜின்னாவின் நிலைப்பாட்டை ஒத்துப்போகும் வகையில் அமைந்துள்ளது. எனவே, இங்கு நடைபெற்றுவரும் போராட்டங்கள் பாகிஸ்தானுக்கு ஆதரவான போராட்டமாக மாறிக் கொண்டிருக்கிறது. இந்த போராட்டத்தின் மூலம் மதக் கலவரத்தை ஏற்படுத்தும் முயற்சிகளில் காங்கிரஸ், திமுக உள்ளிட்ட கட்சிகள் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றன என தெரிவித்தார்.