ETV Bharat / state

கோயில் அர்ச்சகர் கீழே விழுந்து உயிரிழப்பு...!

author img

By

Published : Dec 12, 2019, 8:44 AM IST

Updated : Dec 12, 2019, 12:39 PM IST

கள்ளக்குறிச்சி: கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு கோயில் கோபுரத்தில் தீபம் ஏற்றச் சென்ற அர்ச்சகர் கீழே விழுந்து உயிரிழந்தார்.

Kallakurichi Temple Archbaker death
Kallakurichi Temple Archbaker death

கள்ளக்குறிச்சி மாவட்டம் தீப்பெட்டி தொழிற்சாலை பகுதியைச் சேர்ந்தவர் குருமூர்த்தி (19). இவர் ராஜராஜேஸ்வரி கோயிலில் அர்ச்சகராக பணிபுரிந்து வருகிறார். கார்த்திகை தீபத்தின் இரண்டாம் நாளான நேற்று இவர் கோவிலின் கோபுரத்தில் தீபமேற்ற சென்றதாக கூறப்படுகிறது.

கோயில் வளாகத்தில், ஓம் சக்தி வழிபாட்டு மன்றத்தினர் பிரசாத பொட்டலங்கள் தயார் செய்து கொண்டிருந்தனர். அப்போது, திடீரென பட்டாசு வெடிப்பது போல் சத்தம் கேட்டதுடன் விளக்கேற்றச் சென்ற குருமூர்த்தி கீழே விழுந்து பேச்சு மூச்சற்று நிலையில் கிடந்துள்ளார்.

இதைக்கண்டவர்கள் குருமூர்த்தியை சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் குருமூர்த்தி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

அர்ச்சகர் உயிரிழப்புக்கு கண்ணீர் மல்க கதறும் பெண்கள்

இதையடுத்து, உடற்கூறாய்வுக்காக பிணவறைக்கு கொண்டு செல்லப்பட்டது. கார்த்திகை தீபத்தின் இரண்டாம் நாளான நேற்று இதுபோல் சம்பவம் நடந்திருப்பது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க:

#HBDRajinikanth அன்றும்..இன்றும்..என்றும் ரஜினி 'தனி வழி' கொண்ட தலைவனுக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்!

Intro:tn_vpm_01_kallakurichi_electrical_schoking_young_boy_death_vis_tn10026.mp4Body:tn_vpm_01_kallakurichi_electrical_schoking_young_boy_death_vis_tn10026.mp4Conclusion:கள்ளக்குறிச்சியில் கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு கோவில் கோபுரத்தில் தீபம் ஏற்றச் சென்ற 19 வயது வாலிபர் உயிரிழப்பு !!

கள்ளக்குறிச்சி மாவட்டம் கள்ளக்குறிச்சி தீப்பெட்டி தொழிற்சாலை அருகே உள்ள தனிநபருக்கு (சுந்தர்ராஜன்) சொந்தமான ராஜராஜேஸ்வரி கோவிலில் அதே ஊரை சேர்ந்த மணிகண்டன் மகன் குருமூர்த்தி 19 என்பவர் அர்ச்சகராக பணியாற்றி வருகிறார். இவர் கார்த்திகை தீபத்தின் இரண்டாம் நாளான கோவிலை ஒட்டி உள்ள கோவில் நிர்வாகி வீட்டின் வழியாக ஏறி கோபுரத்தில் தீபமேற்ற சென்றுள்ளதாக கூறப்படுகிறது,இந்த நிலையில் அந்த கோவிலில் ஓம் சக்தி கோவில் வழிபாடு மன்றத்தினர் கோவிலின் உள்ளே பிரசாத பொட்டலங்கள் தயார் செய்து கொண்டிருந்த போது திடீரென பட்டாசு வெடிப்பது போல் சத்தம் கேட்டவுடன் குருமூர்த்தி கீழே விழுந்து பேச்சு மூச்சற்று நிலையில் கிடந்துள்ளார்,இதனை கண்ட கோவிலில் இருந்தவர்கள் குருமூர்த்தியை சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர், அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் குருமூர்த்தி ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். இதனையடுத்து குருமூர்த்தியின் சடலம் உடற்கூறு ஆய்வுக்காக பிணவரைக்கு கொண்டு செல்லப்பட்டது .மேலும் கார்த்திகை தீபத்தின் இரண்டாம் நாளான நேற்று இதுபோல் சம்பவம் நடந்திருப்பது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் மின்சாரம் தாக்கி உயிழந்தாரா என கள்ளக்குறிச்சி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Last Updated : Dec 12, 2019, 12:39 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.