விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற தொகுதியின் எம்பி கவுதம சிகாமணி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது, ‘கள்ளக்குறிச்சி பகுதி விவசாயிகளுக்கு நிறுத்திவைக்கப்பட்டுள்ள கரும்பு நிலுவைத் தொகை குறித்து, சட்டமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் குரல் கொடுத்திருக்கிறார். ஆனால், இன்னமும் நிலுவைத் தொகை வழங்கப்படவில்லை, இன்சூரன்ஸ் தொகையை பிடித்து வைத்துள்ளார்கள். தற்போது ஆலை இயங்கத் தொடங்கி இருக்கிறது. நிலுவைத் தொகை, இன்சூரன்ஸ் தொகை வழங்கப்பட வேண்டும் என கோரிக்கை வந்துள்ளது. அதை எல்லாம் வழங்க சம்பந்தப்பட்ட அலுவலர்களைச் சந்தித்து விவசாயிகளுக்கு வழங்க செய்வேன்’ என்றார்.
மேலும், ‘தொகுதியில் நிலவும் குடிநீர் பிரச்னை சம்பந்தமாகவும், போக்குவரத்திற்காக பேருந்து வசதி கேட்டும் அதிலும் குறிப்பார இரவு நேரங்களில் பேருந்து வசதி கேட்டும் கோரிக்கைகள் வந்துள்ளது. இது சம்பந்தமாக போக்குவரத்துத் துறை அலுவலர்களையும், வட்டார வளர்ச்சி அலுவலர்களையும் அழைத்து பேசியுள்ளேன், விரைவில் நிவர்த்தி செய்யப்படும்’ என்றார்.