திமுக சார்பில் விழுப்புரம் மாவட்டம் திருச்சி தேசிய நெடுஞ்சாலை அருகே அமைந்துள்ள கலைஞர் அறிவாலயத்தில் அறிஞர் அண்ணாவின் வெண்கல சிலைக்கு அருகில் மறைந்த முன்னாள் திமுக தலைவர் கருணாநிதியின் முழு உருவ ஆறடி வெண்கல சிலை அமைக்கப்பட்டது.
இச்சிலையை திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். அதைத்தொடர்ந்து கருணாநிதி, அண்ணாவின் சிலைகளுக்கு மாலைகள் அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார். விழாவையொட்டி கலைஞர் அறிவாலயம் முழுவதும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.
நிகழ்ச்சியில் திமுக முன்னாள் அமைச்சர்கள் க. பொன்முடி, எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், கே.என். நேரு, கள்ளக்குறிச்சி மக்களவை உறுப்பினர் பொன். கௌதம சிகாமணி, மாவட்ட பொருளாளர் நா.புகழேந்தி உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க: மு.க. ஸ்டாலினை நேரில் சந்தித்து ஆசி பெற்ற உள்ளாட்சி பிரதிநிதிகள்!