ETV Bharat / state

பாஜக ஆட்சியில் 100க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் கொல்லப்பட்டனர் - காதர் மொய்தீன் - இந்திய யூனியன் முஸ்லிம் லீக்

விழுப்புரம்: பாஜக ஆட்சியில் 'பசு பாதுகாப்பு' என்ற பெயரில் 100க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் கொல்லப்பட்டதாக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசிய தலைவர் காதர் மொய்தீன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

Kadar moideen thanks to TN People
author img

By

Published : Jun 28, 2019, 11:21 PM IST

விழுப்புரத்தை அடுத்த காணை பகுதியில் மதரஸா கட்டட திறப்பு விழா இன்று நடைபெற்றது. இதில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசிய தலைவர் காதர் மொய்தீன் மற்றும் அக்கட்சியின் மாநில துணை தலைவர் ஷபிகுர் ரஹ்மான் கலந்து கொண்டு திறந்து வைத்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய காதர் மொய்தீன், மக்களவை தேர்தலில் திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு வாக்களித்து வெற்றி பெற செய்த மக்களுக்கு நன்றி தெரிவித்தார். பாஜக ஆட்சியில் 'பசு பாதுகாப்பு' என்ற பெயரில் 100க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என தெரிவித்தார்.

மேலும், பேச்சு வழக்கில் இல்லாத சமஸ்கிருத மொழியை மீண்டும் உயிர்பிப்பதற்கான மறைமுக சதிதான் இந்த புதிய கல்விக் கொள்கை திட்டம் என்றும் புதிய கல்வி கொள்கை திட்டத்தை, கல்வியாளர்களை கொண்டு தயாரிக்காமல் அவர்களது சிந்தனையில் உதித்தை வைத்து தயாரித்துள்ளனர் என குற்றஞ்சாட்டினார்.

பாஜக ஆட்சியில் நூற்றுக்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் கொல்லப்பட்டனர் -காதர் மொய்தீன்

Intro:Body:விழுப்புரத்தை அடுத்த காணை பகுதியில் மதரஸா கட்டட திறப்பு விழா இன்று நடைபெற்றது. இதில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் காதர் மொய்தீன் மற்றும் அக்கட்சியின் மாநில துணை தலைவர் ஷபிகுர் ரஹ்மான் கலந்து கொண்டு திறந்து வைத்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய காதர் மொய்தீன்.,

"நாடாளுமன்ற தேர்தலில் திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு வாக்களித்து வெற்றிபெற செய்த தமிழக மக்களுக்கு நன்றி.

கடந்த முறை நாடாளுமன்ற தேர்தலில் வெற்றிபெற்ற அதிமுக எம்பிக்கள் பிள்ளையார் போல் இருந்தனர்.

ஆனால், இந்த முறை வெற்றி பெற்று நாடாளுமன்றம் சென்றுள்ள திமுக மற்றும் கூட்டணி கட்சி எம்.பி.க்கள் தமிழகத்தின் உரிமைக்காக சிறப்பான முறையில் செயல்பட்டு வருகின்றனர். இந்த நிலை நீடிக்க வேண்டும்.

தமிழக அரசு 6 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் நெம்மேலியில் துவக்கி உள்ள கடல்நீரை குடிநீராக்கும் திட்டம், கலைஞர் கருணாநிதி முதல்வராக இருந்தபோது துவங்கப்பட்டது.

ஆனால், பின்னர் வந்த அதிமுக அரசு அந்தத் திட்டத்தை கிடப்பில் போட்டதால் தற்போது சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் நிகழ வேண்டும் என்பதே அனைவரின் விருப்பமாக உள்ளது.

மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கை திட்டம் புதிய கல்வி கொலை திட்டம். கல்வியை மாநிலப் பட்டியலுக்குக் கொண்டு வரவேண்டும்.

பேச்சு வழக்கில் இல்லாத சமஸ்கிருத மொழியை மீண்டும் உயிர்பிப்பதற்கான மறைமுக சதிதான் இந்த புதிய கல்விக் கொள்கை திட்டம்.

புதிய கல்வி கொள்கை திட்டத்தை, கல்வியாளர்களை கொண்டு தயாரிக்காமல் அவர்களது சிந்தனையில் உதித்தை வைத்து தயாரித்துள்ளனர்.

பாஜக ஆட்சியில் 'பசு பாதுகாப்பு' என்ற பெயரில் 130க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

விழுப்புரம் மாவட்டம் சந்தைப்பேட்டையில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்க உருது பள்ளியை, நடுநிலை பள்ளியாக தரம் உயர்த்த வேண்டும்" என்றார்.Conclusion:இந்த செய்தியாளர் சந்திப்பின் போது இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் விழுப்புரம் மாவட்ட செயலாளர் திமுக மாவட்ட பொருளாளர் புகழேந்தி ஆகியோர் உடனிருந்தனர்.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.